ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக
ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக
பினராயி விஜயனின் இந்த உரைகள், எழுத்துகளின் மையப்புள்ளியாக ‘ஆர்.எஸ்.எஸ்.சின் ஆபத்துகளை அடையாளம் காண்பதும், அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெளிவான, குறிப்பான எதிர்ப்பைக் காட்டுவதற்கு அழைப்பு விடுப்பதும் ஆகும். அது தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, சங்பரிவாரின் கொள்கைகள் கலாச்சாரத் திணிப்புக்களுக்கெதிராகச் செயல்பட வேண்டும். இவற்றைப் படிப்பது அவசியமானது.ஆனால் புத்தகத்துக்குள் இவை மட்டுமே இல்லை, புதிய-தாராளமயக் கொள்கைகளிலும், குறிப்பாக முதலாளித்துவத்திலும் பாஜக/ஆர்.எஸ்.எஸ்.சிடம் மாற்று கிடையாது என்ற தெளிவான பார்வையையும் காண்கிறோம். ஒரு இடதுசாரி மாற்று அதிகாரம் அவசியமானது. அதனை கேரளாவில் இடதுசாரிகளின் கொள்கைகளில் காணலாம். ஆனால் அது மக்கட் பரப்பின் முக்கியமான பகுதிகளின் போராட்டத்திலும் கருக்கொள்கிறது. – பேரா. விஜய் பிரசாத்