வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள்
வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள்
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எது, எது நடக்க கூடாதோ அவை அனைத்தும் நாயகியின் வாழ்வில் நடந்தேறி முடிந்திருக்கும். இருந்தும் வைராக்கியமாக போராடி கொண்டிருக்கிறாள் மிதுலா. அவளுக்காக அல்ல. அவளை நம்பி இருப்பவர்களுக்காக. இக்கதையை படித்து முடிக்கையில் மிதுலாவை போன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சக்தியை போன்று ஒருவன் கிடைப்பானா என்ற கேள்வி நம்மையும் அறியாமல் மனதில் முளைத்துவிடும். கிடைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றிய கணம் முதலில் இப்படியெல்லாம் பெண்களுக்கு நேராமலேயே இருக்கட்டும் என தோன்றுவதும் உறுதி. அத்தனை ரணம். அழகிய நடையில் மிகவும் விறுவிறுப்பான அடுத்து என்ன, அடுத்து என்ன என்று கடைசி வரையிலுமே சுவாரசியத்தை குறைக்காமல் கொண்டு சென்றுள்ளார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.