திருவள்ளுவர் திடுக்கிடுவார் - Nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
திருவள்ளுவர் திடுக்கிடுவார் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அரங்கேறி, 'தெய்வநூல்' என்றும், 'பொய்யா மொழி' என்றும், 'தமிழ் மறை' என்றும், 'பொதுமறை' என்றும் போற்றப்பட்டு வந்திருக்கிற திருக்குறளுக்கு, சுமார் அறுநூறு ஆண்டு களுக்கு முன்னால் எழுதப்பட்ட பரிமேலழகர் உரைதான் மிகச் சிறந்த உரையாகக் கிடைத்துள்ளது. பரிமேலழகருக்கு முன்னால் ஒன்பது பேர் திருக்குறளுக்கு உரை எழுதியிருந்தார்கள், அவைகள் எல்லாவற்றினும் சிறந்ததாகப் பரிமேலழகர் உரை ஏற்றுக் கொள்ளப் பட்டதால் மற்ற உரைகளெல்லாம் வழக்கிழந்து மறைந்து விட்டன. அதனால் கடந்த அறுநூறு ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் பரிமேலழகர் உரையைப் பின்பற்றித்தான் திருக்குறளை அனுபவித்து வருகின்றார்கள். ஆனால் போற்றற்கு உரிய உரையாசிரியரான பரிமேலழகரும் பலவிடங்களில் திருவள்ளுவருடைய கருத்துக்குப் பொருந்தாத உரைகளையும் சில இடங்களில் திருவள்ளு வருடைய கருத்துக்கு முற்றிலும் விரோதமான உரை களையும் செய்துவிட்டார். பரிமேலழகருடைய உரை யைப் பின்பற்றி அதற்கு “விரிவுரை' என்றும், 'விளக்க உரை' என்றும், 'தெளிவுரை” என்றும் பலபேர் பலவித மான வியாக்யானங்களைச் செய்திருக்கிறார்கள். அவைக ளெல்லாம் பரிமேலழகர் உரைகளை மேலும் குழப்பிவிட்டன.