தென்னிந்தியப் பறையர்கள் திராவிடர்களா?
விவசாயக் கூலிகளாக, அடிமை வகுப்பினராக ஏனைய மக்களிடமிருந்து என்றென்றைக்குமாக பிரித்து வைத்தல்; கலப்பு மணங்களைத் தடுத்தல்: உயர் சாதியினரின் வசிப்பிடப் பகுதிகளிலிருந்து விலக்கித் தனியே ஓரிடத்தில் ஓட்டுக் குடிசையில் வாழ அவர்களை நிர்பந்தித்தல் வருடத்திற்கு இருமுறை உச்சந் தலைக்கு மேல் சூரியன் சுட்டெரிக்கும் வெப்ப மண்டலப் பகுதியில் அமைந்துள்ள இந்நாட்டின் வெட்ட வெளியில் அவர்களைக் கடுமையாக உழைக்க நிர்பந்தித்தல், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான எல்லா சாத்தியப்பாடுகளையும், அமைதியான வேலைவாய்ப்பைப் பெறுவதையும் என்றென்றைக்கும் மறுத்தல்; அவர்களுக்கான கல்வியை மறுத்தல்; உழைப்பிற்கான ஊதியத்தினை மறுத்தல்; போதிய உணவு உடை அளிக்காமை, மது அருந்துதலை ஊக்குவித்தல், இறந்த விலங்குகளை உண்ண வைத்தல், பெண்கள் மரியாதையான எளிய உடை அணிவதைக்கூடத் தடுத்தல், சுருக்கமாகச் சொல்வதானால். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக பிராமணர்களும் உயர் சாதி திராவிடர்களும் பறையர்களையும், பிற தாழ்த்தப்பட்ட சாதியினரையும் இவ்வாறே நடத்தினர். (பக்கம் -34-35)
மேலே குறிப்பிட்ட பழக்கவழக்கங்களைக் கொண்டு, முன்னர் பறையர்கள் மதிக்கத்தக்க இடத்தில் இருந்தனர் என்பதையும் இவர்கள் தனித்த இனம் என்பதையும் நிறுவ முடியலில்லை. வரலாற்றின் பின்புலத்தில் இவர்களை வைத்துப் பார்த்தாலும்கூட. இவை பறையர்களின் தொல் விடுதலையையும், இவர்கள் அடிமைகளாக்கப்படுவதற்கு முன் அவர்களுக்கிருந்த சமூக மேன்மையையும் நிரூபிக்குமேயன்றி இன வேறுபாட்டினை திரூபிக்காது. (பக்கம் -330)