தமிழ்நாட்டு வரலாறு பாதைகளும் பார்வைகளும்
வரலாறு என்பது தலைமுறை தலைமுறையாக மாற்றமில்லாமல் வந்து கொண்டிருக்கும் தகவல் அல்ல. வரலாற்றுச்சூழல்கள் விளக்கப்பட வேண்டியவையாய் இருக்கின்றன. இந்த விளக்கங்கள். விவாதத் தருக்கத்திலிருந்து வெளிப்பட்ட பொதுமைகளை வழங்கும் சான்றுகளைப் பகுப்பாய்வுச் செய்வதிலிருந்து வருகின்றன. புதிய சான்றுகளால் அல்லது ஏற்கெனவே இருக்கிற சான்றுகளுக்குப் புதிய பொருள் கொடுப்பதால் பழமைகளைப் பற்றிய ஒரு புதிய புரிதலை நாம் அடையமுடியும்..." என்பார் மூத்த வரலாற்றாளர் ரொமிலா தாப்பர். அத்தகைய புதிய புரிதலை நமக்கு உருவாக்கும் தீவிரத்துடனும் அக்கறையுடனும் இக்கட்டுரைகளை எழுதியுள்ள தோழர் மணிக்குமார் அவர்களை தோழமையால் தழுவிக்கொள்கிறேன். ஆழ்ந்தகன்ற வாசிப்பும் இடையறாத தேடலும் மார்க்சியக் கண்ணோட்டமும் கொண்ட அவருடைய இந்நூலால் இந்திய - தமிழ்நாட்டு வரலாறு மேலும் வளமடைந்து துலங்குகிறது.