தமிழ்பெண் பொதுவெளி தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
தமிழீழ தேசிய இன விடுதலை போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றியும், இந்த போராட்டம் பெண்களின் சமூக-அரசியல் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் பற்றிய தகவல்களையும் தொகுத்த நூலாக இந்நூல் வெளிவருகிறது.
******
தமிழீழத்தில் வாழ்ந்தவரும், 2009 இனப்படுகொலைக்குப் பின்பு தற்போது நியூசிலாந்து நாட்டில் வாழ்ந்து வருபவருமான ஆய்வாளர் மாலதி அவர்கள் இந்நூலை தொகுத்து எழுதி இருக்கிறார். இலங்கையுடன் சேர்ந்து சர்வதேசம் நடத்திய 2009 இனப்படுகொலைக்குப் பின்பான காலத்தில், தொடரும் இனப்படுகொலைக்கு நடுவில் இன்றும் அடக்குமுறையை எதிர்கொண்டு வாழும் பெண் போராளிகளின் வழியாக இவ்வரலாற்றை இந்நூல் நமக்கு கொடுக்கிறது.
தமிழீழத்தின் பல்வேறு போராட்ட காலங்களில் பெண்களின் பங்களிப்பு இவாறு அமைந்தது என்பதை பற்றிய விரிவான, புதிய தகவல்களை நமக்கு அளிப்பதன் மூலமாக ஈழப்போராட்டத்தின் முற்போக்கு கூறுகளை சற்று நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பை இந்நூல் நமக்கு தருகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.