பெண்ணியம் பேசலாம் வாங்க
உரையாடல் பாணியில் பெணணியம் பற்றி பெண் சமத்துவம் பற்றிப் பேசுவோர் நம் சமூகத்தில் எதிர்கொள்ளும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக இப்புத்தகம் வந்துள்ளது.கிண்டலும் கோபமும் கலந்த நடை புத்தகத்தின் வரிகளுக்கு உயிர் தருகின்றன.சும்மா வாசிச்சுட்டுப் போயிட முடியாது.பெண் என்கிற காரணத்துக்காக பாரபட்சம் இருக்கக்கூடாது என்பதுதான் பெண்ணியத்தின் சாரம் என்றாலும் அமேசான் பெண்ணியம்,தனித்துப் பார்க்கும் பெண்ணியம்,சுற்றுச்சூழல் பெண்ணியம்,தாராளவாதப் பெண்ணியம்,பொருள்முதல்வாதப் பெண்ணியம் எனப் பலவாக அறியப்பட்டுள்ள பெண்ணியச் சிந்தனைகளை அறிமுகம் செய்யும் இந்நூல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஜனநாயகம்,சமத்துவம்,பெண் விடுதலை என்கிற முழக்கங்களாகப் பெண்ணியத்தை முன்வைப்பது ஏன் என விளக்குகிறது.ஆண்,பெண் இரு பாலரிடத்தும் அவசியம் பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய எளிய புத்தகம்.