பெண்ணால் முடியும்
Original price
Rs. 180.00
-
Original price
Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00
-
Rs. 180.00
Current price
Rs. 180.00
பெண் விடுதலை என்பது என்ன? பெண் விடுதலையென்பது பெரும்பாலான பெண்களாலும், ஆண்களாலும், அறியப் படாமலே உள்ளது. நகையும். புடவையும் நாலுவிதமாகச் சுமந்து செலவுக்குப் பணமும், செலவழிக்க உரிமையும் பெற்றுவிட்டால் அவள் விடுதலைப் பெற்ற பெண் அல்ல. பெண் விடுதலையென்பது நல்ல கணவனுடன் சுகமான வாழ்வு என்பதும் அல்ல. மாறாக, உயர்வான கல்வி. நல்ல உடற்பயிற்சி..! தற்காத்துக் கொள்ளும் தகுதி. உயர் பதவி. வருவாய் சொத்துரிமை. த னக்குத் தேவையானவற்றைத் தானே தீர்மானிக்கும் உரிமை, தன் கணவன் தன் வாழ்வின் துணை, இணை என்ற வாழ்நிலை, சமூகம். அரசியல், அறிவியல், அனைத்திலும் அறிவு பெறல், ஆற்றல் பெறல், ஆணின் உதவியின்றி தற்காத்துக் கொள்ளும் தகுதி, பெறப்போகும் பிள்ளை. கருக்கட்டுப்பாடு இவற்றில் தீர்மானிக்கும் உரிமை பெற்றுள்ள நிலைதான் உண்மையான பெண் விடுதலை. மாமியார் மருமகள் சிக்கல், கணவன் மனைவி மோதல். வரதட்சணைக் கொடுமை. கற்பழிப்பு. கைம்பெண்ணாய் நிற்றல். கதியற்று நிற்றல் போன்றவை பெண்ணடிமை நிலையின் விளைவுகளேயன்றி. இவை பெண்ணடிமைக்கான காரணங்கள் அல்ல. ' பெண்ணுரிமையும், விடுதலையும் பிச்சை யாகப் பெறப்படுபவை அல்ல: பெண்களே எடுத்துக் கொள்ள வேண்டியவை. பெண் விடுதலை பெண்ணுக்கு மட்டும் நன்மை பயக்கக் கூடியது அல்ல. அது ஆணுக்கும் அநேக நன்மை அளிக்கக் கூடியது.