பண்டைத் தமிழ்ச் சமூகத்தி கல்வி
பண்டைத் தமிழ்ச் சமூகத்தி கல்வி
தமிழ் சமூகத்தில் கல்வி’ எனும் பொதுத் தலைப்பில், ஐந்து தொகுதிகளை மாற்று பதிப்பகம் கொண்டு வந்து தமிழ் கல்வி வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. பேராசிரியர் வீ. அரசு ஒருங்கிணைப்பாளராக இருந்து செய்துள்ள இப்பணியின் முதல் தொகுதி இது. 1950களில் தமிழ் கல்சர் இதழில் சங்ககாலத் தமிழர்களின் கல்வி குறித்து சேவியர் தனி நாயகம் அடிகளார் எழுதிய நான்கு கட்டுரைகளின் தமிழாக்கம்.
பழந்தமிழ் இலக்கியமும் பண்டைய இந்தியக் கல்வியும், பழந்தமிழ் சமூகத்தின் கல்வியாளர்கள், பழந்தமிழ்ப் புலவர் - கல்வியாளர்கள் மற்றும் பழந்தமிழகத்தில் சமண பௌத்த கல்வி ஆகிய நான்கு அருமையான கட்டுரைகளின் வழியே சங்ககால தமிழ்ச் சூழலில் கல்விக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் உலகளவில் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை ஆழமாக விவரிக்கின்றார் ஆசிரியர். குறிப்பாக பாடல் புனையவும் அரசருக்கு ஆலோசனை வழங்கவும் புலவர்கள் இருந்ததும் மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்க பாணர்கள் இருந்ததையும் சுட்டிக்காட்டும் தனி நாயக அடிகள், கிமு 50க்கும் கிபி200க்கும் இடையேயான ஒரு பத்து தலைமுறை சார்ந்த புலமையை ஆய்ந்து, அவர்களில் பெண்பாற்புலவர்கள், அவர்தம் ஊர்கள், வேளாண்மை, வணிகம், கைவினையாளர், குறவர், எயினர் சமூகத்தவர், மருத்துவர் கணக்கியலார் வானூலார், மரத்தச்சர், கொல்லர், மண்பாண்டம் செய்வோர் கூட பாடல் இயற்றும் அளவுகல்வி கேள்விகளில் சிறந்திருந்ததை சுட்டுகிறார். கடைசிக்கட்டுரையான சமண பௌத்த கல்வி குறித்த கட்டுரை மிகவும் குறிப்பிடத்தக்க அருமையான விருந்து. கல்விப்புரட்சி!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.