நீதிமன்றங்களில் தந்தை பெரியார்
நீதிமன்றங்களின் புனிதத் தன்மைகளை உடைத்து நீதிபதிகளுக்கே நீதி சொன்னவர் தந்தை பெரியார் அவர்களாவார்.
தமது பொது வாழ்க்கையில் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நியாயத்தை மய்யப்படுத்தி தமது போராட்டக் களங்களை அமைத்துக் கொண்டவர்.
போலீஸ் கைதுக்குப் பயந்து ஓடி ஒளியாதவர். தண்டணைக்கு அஞ்சாதவர். அவரின் மேற்கண்ட பண்புகளை விளக்கும் ஆதாரக் களஞ்சியம்தான் இந்த நூலாகும்.
‘இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும் - ஏன்?’ கட்டுரைக்காக தந்தை பெரியார் மீது சுமத்தப்பட்ட இராஜ துவேச வழக்கு, விசாரணை, தந்தை பெரியாரின் தன்னிலை விளக்க அறிக்கை, தண்டனை இவைகுறித்த விமர்சனங்கள் ஆகியவை தொகுக்கப் பட்டுள்ளன.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் மீதான வழக்கு விவரம், வாக்குமூலம், தண்டனை. மேலும் தந்தை பெரியார், தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் ஆற்றிய உரை ஆகியவை தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
‘பொன்மொழி’ வழக்கில் பெரியாரின் வாக்குமூலம் - தீர்ப்பு - விடுதலை. இணைப்பாகத் தமிழ்நாடு அரசின் தடை நீக்க ஆணை.
1957இல் சென்னை உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விவரம், பெரியார் கொடுத்த வரலாற்றுப் புகழ்மிக்க வாக்குமூலம் - தீர்ப்பு.
1958இல் திருச்சியில் நடைபெற்ற குத்துவெட்டு வழக்கின் பின்னணியும் வாக்குமூலமும் தீர்ப்பும் படிக்கப் படிக்க சிலிர்க்க வைக்கும் வரலாற்று ஆவணங்களின் தொகுப்பு. அனைவரும் படிக்க வேண்டிய ஆதாரக் குவியல்.