நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் டி. எம். நாயர் வாழ்வும் தொண்டும்
நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் டி. எம். நாயர் வாழ்வும் தொண்டும், கவிஞர் கூ. வ. எழிலரசு,திராவிடர் கழகம்,பெரியார்புக்ஸ்,Neethikkatchi Thalaivar Dr TM Nair Vaazhvum Thondum,K. V. Ezhilarasu,Dravidar Kazhagam,Periyarbooks.
தென்னிந்திய வரலாற்றில், இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதுகளில் நீதிக் கட்சியின் தோற்றம் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 3 சதவீத மக்கள் தொகை கொண்ட பார்ப்பனர்கள் மொத்த சமுதாயத்தின் அரசியல், பொருளாதாரக் களங்களில் ஆதிக்கம் பெற்றிருந்தனர். பார்ப்பனர், பார்ப்பனரல்லாதவரிடையே பெரும் இடைவெளி இருந்தது.
நீதிக்கட்சி அந்த இடைவெளியைக் குறைக்க வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்டது. அக்கட்சியின் கோட்பாடுகள், திட்டங்களைத் தெளிவாக ஆய்வு செய்தால், அதனுடைய வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது சமூக நீதிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என விளங்கும்.
இத்தகு சூழலில், பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சார்ந்த தலைவர்களின் எழுத்துக்கள் வாயிலாகவும், ஆங்கிலேயக் கல்வியாளர்கள் வாயிலாகவும், பார்ப்பனரல்லாதவர்கள் எல்லாம் இனவழியே திராவிடர்கள் என்ற உணர்வும் வெளியாயிற்று. பார்ப்பனரல்லாத பிரிவினர் தம் நலன்களைப் பாதுகாக்க ஓர் இயக்கத்தை உருவாக்கினர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.