குட்டியூண்டு முயல்
ராபர்ட் க்ராஸ் 1925 ம் ஆண்டு அமெரிக்கா நாட்டில் பிறந்தவர். குழந்தை இலக்கிய எழுத்தாளர், ஓவியர், பதிப்பாளர் என பல முகங்களைக்கொண்டவர். 12 வயது முதல் ‘தி நியூயார்க்கர்’ என்ற பத்திரிக்கையில் கார்ட்டூன் வரைந்து தரும் வாய்ப்பைப் பெற்றார், 200 க்கும் அதிகமான குழந்தை புத்தகங்களை எழுதி படங்களும் வரைந்தவர். ‘விண்ட் மில் புக்ஸ்’ எனும் பதிப்பகத்தை ஆரம்பித்து நல்ல பல சிறுவர் புத்தகங்களை பதிப்பித்தவர். கேரட் அளவு உயரமில்லாத ஒரு முயலைப் பார்த்திருக்கிறீர்களா? பூவை விடவும் சிறிதான அந்த முயல் எதிர்கொண்ட பிரச்சனைகள் ஏராளம். வீட்டுக்கு எதிரில் வசித்த மற்ற முயல்கள் ஏளனம் செய்து பேசின. சண்டையிட்டன. கடைசியில் ஒரு நாள், அந்தக் குட்டியூண்டு முயலுக்குத் தைரியம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. வம்பு பேசி வாயடித்த முயல்களை அடித்தே விரட்டியது. அப்பா முயலை வியப்பில் ஆழ்த்திய குட்டி முயலின் கதையை வாசியுங்கள் அன்புக் குழந்தைகளே!.
குட்டியூண்டு முயல்,kuttiyoondu muyal,books for children,
கொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன், Periyarbooks,பெரியார்புக்ஸ்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.