கலைஞர் வாழ்வில் பெரியார்
கலைஞரின் அரசியல் குரு பெரியார். பெரியாரின் லட்சியம் இவர் ஆரம்பக் கால கொள்கை... அதுவும படிக்கிற காலத்திலேயே... இன்று கலைஞரே ஒரு வாழும் பெரியாராய்... ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில்... தந்தை பெரியார் - டாக்டர் கலைஞர்…
முன்னுரை என் இனிய வாசக நண்பர்களே!
முதலில் வணங்கி மகிழ்கிறேன். ஒரு நல்ல நூல் வழியே மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...
17.12.72 நான் எழுத்துலகிற்கு அறிமுகம். வாழ்க்கையை சுமை என்கிற தத்துவ மரபுக்கவிதை வெளிவந்தது விகடனில்
இன்று வரை எல்லா இதழ்களிலும்... சமையல் குறிப்பு தவிர எழுத்தின் எல்லா வகையும்...
இதோடு பயன்மிக்க 100 நூல்கள் என்பது என் லட்சியம். உங்கள் ஆதரவு... பதிப்பக ஆதரவு... ஆச்சரியம்... இது 93-வது நூல்... இன்றும் 10 நூலுக்கான முயற்சி கையில்... பரவாயில்லை அதோடு ஒரு லட்சியத்திற்குள் ஒரு லட்சியம். அது... "கலைஞர் குறித்து குறைந்தது 10 நூல்' - ஆச்சரியம்...இரண்டே ஆண்டில் இது 9-வது நூல்... 10-வது நூல் எழுத்தில்...எல்லாம் திருமகள் நிலைய ஆதரவு... அவர்களுக்கு என் நன்றி. கலைஞர் வரிசையில் இது முக்கிய நூல்.
கலைஞரின் அரசியல் குரு பெரியார். பெரியாரின் லட்சியம் இவர் ஆரம்பக் கால கொள்கை அதுவும் படிக்கிற காலத்திலேயே...... இன்று கலைஞரே ஒரு வாழும் பெரியாராய்