‘திராவிடர் இயக்கத் தலைவர்’ டாக்டர் சி.நடேசனார் (நூல் வரிசை -1/5)
அக்காலத்தில் சென்னை நகரத்திலும் பெரிய நகரங்களிலும் படித்துவந்த மாணவர்கள் தங்கவும் உண்ணவும் தேவையான ஹாஸ்டல்கள் இன்றி மிகுந்த துன்பம் அடைந்து வந்தார்கள். நடைபெற்று வ ந் த சி ல த ங் கு மிடங் க ளு ம் தி ரா வி ட மாணவர்களுக்கு இடமில்லை என்று கூறி அவர்களைத் துன்பப்படச் செய்து வந்தன. இந்நிலைமையைக் கண்டு மனம் வருந்திய நடேசனார் இத்துறையிலாவது தமது சிறிய பணியை ஆற்றி வர எண் ண ங்கொண்டார்; செயலில் ஈடுபட்டார். செயல் - திராவிடர் இல்லமாக உருப்பெற்றது. இத்திராவிடர் இல்லமானது திராவிட மாணவர்களுக்குக் கிடைப்பதற்கரியதொரு பேறாக அமைந்தது. சர், ஆர்.கே. சண்முகம் செட்டியார், ரெங்கராமானுச முதலியார் போன்றவர்கள் இத் திராவிடர் இல்லத்தில் தங்கிப் படித்து வந்தார்கள் என்று தெரியவரும்போது நடேசனார் கண்ட திராவிடர் இல்லத்தின் பெரும் பயனும் புகழும் நன்கு தெரியவருகிறது.