திராவிட இயக்கப் பெருமக்கள்
திராவிட இயக்கப் பெருமக்கள் – அறிஞர் அண்ணா – சீதை பதிப்பகம் வெளியீடு.
● தென்னாட்டின் பெர்னாட்ஷா என புகழ்பெற்ற பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரின் முதல் மாணவர். ஈரோட்டு பாசறையிலிருந்து வெளி வந்த பேராற்றல் மிக்க தலைவர்களில் முதலானவர். எல்லோராலும் பாராட்டப்பட்டவர். எல்லோரையும் பாராட்டியவர்.
பிறரை அன்பால் பாராட்டினார்.
பிறரின் அன்பை பாராட்டினார்.
தன்னை வசையால் துளைத்தவர்களை – வாழ்க வசவாளர்கள் என்றார், அந்த நெசவாளர்களின் காஞ்சித் தலைவன்.
● அறிஞர் அண்ணா, பல்வேறு சமயங்களில் – தனது எழுத்துக்களில், பேச்சுக்களில், தம்பிக்கு மடல்களில், இரங்கற் பாக்களில், மணிவிழாக்களில், பொதுக் கூட்டங்களில், மாநாடுகளில் திராவிட இயக்கத்திற்காக பாடுபட்ட இயக்க முன்னோடிகளை பாராட்டியுள்ளார். அந்த செய்திகளையெல்லாம் சேகரித்து ஒரு நல்ல புத்தகமாக தந்ததே இந்த நூல். 37 திராவிட இயக்க பெருமக்கள் பற்றி அண்ணாவின்
கருத்துகள் இதில் பதிவாகி உள்ளது.