புல்டோசர் அரசியல்
புல்டோசர் அரசியல் - சாரதா தேவி
திராவிட இயக்க அரசியலுடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர் அருமைத் தோழர் சாரதா தேவி. காஞ்சியைச் சேர்ந்த அவர் வங்கி அதிகாரியாகப் பணியிலிருந்த காலம்தொட்டே சமூக உணர்வோடு பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டு வருபவர். தற்போது அந்தப் பணியையும் உதறிவிட்டு தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்குத் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்துள்ளார்.
வர்ணாசிரம மதவாதம், சாதீயம், பெண்ணடிமை, ஆண் மேலாதிக்கம், தீண்டாமை, வடமொழி மற்றும் இந்தித் திணிப்பு போன்ற எண்ணற்ற தடைகள் தமிழரின் - தமிழ்ப் பெருநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளாக நீண்ட நெடிய காலமாகவே இருந்துவரும் நிலையில் ஓரளவிற்கேனும் விழிப்புணர்வு தோன்றியிருக்கும் தற்போதைய காலத்தில் தோழர் சாரதா தேவி போன்றோர் களமிறங்கியிருப்பதுவும் பெரும் நம்பிக்கையைத் தருவதாகும்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.