தமிழ் இன்று
தமிழ் இன்று கேள்வியும் பதிலும் மொழி சார்ந்த நம்முடைய அக்கறை அறிவியல் அடிப்படையில் அமைந்ததா, ஐதீகம் சார்ந்ததா? இந்த நூலில், தமிழ்மொழி வளர்ச்சி குறித்து நாம் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மரபு இலக்கணத்திலும் சமூக மொழியியலிலும் ஆழ்ந்த புலமைமிக்க முனைவர் இ. அண்ணாமலை அறிவியல் அடிப்படையில் விளக்கம் அளிக்கிறார். தமிழ் மொழியின் வயதை அறிவியல் முறையில் கணக்கிட முடியுமா? தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை போதுமானதா? தொல்காப்பியர் கூறும் தமிழ் இலக்கணம் இன்றைய தமிழுக்குப் பொருந்துமா? தமிழில் உருவாக்கிய அறிவியல் கலைச்சொற்கள் ஏன் அகராதிகளில் தூங்கிக்கொண்டிருக்கின்றன? தமிழ்மொழி வளர்ச்சிக்கு என்னவெல்லாம் செய்யலாம்? இன்றைய எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் வேறு வேறு மொழிகளா, தனித்தமிழ் ஒன்றே தமிழா? இலக்கண ஆராய்ச்சியில் மரபுவழிக்கும் மொழியியல்வழிக்கும் ! ஏன் பகைமை? தமிழை வீட்டு மொழியாகவே வைத்துக்கொண்டு தமிழ்வழிக் கல்வி சிறப்படைய முடியுமா? இதுபோன்ற பல கேள்விகள் முனைவர் அண்ணாமலையிடம் கேட்கப்பட்டவை, சில பொது வெளியில் எழுப்பப்பட்டவை. இதன் மூலம், தமிழ்மொழி குறித்து நாம் கேட்க நினைத்த பல கேள்விகளுக்குத் தெளிவான பதில்களை வழங்குகிறது இந்த நூல். மொழியை ஆராதிப்பதற்கும் அலசுவதற்கும் உள்ள வித்தியாசத்தை இந்தப் பதில்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். தமிழ் கற்கும் மாணவர்களும், ஆசிரியர்களும், ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் கட்டாயம் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியமான நூல்.