Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பேரறிஞர் அண்ணா ஆட்சியில் அமர்ந்த கதை

Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

காஞ்சியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, தன் கண்ணிய அரசியல் வாழ்க்கையால் தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவராக உயர்ந்தவர் அண்ணாதுரை.
கொந்தளிப்பான பல அரசியல் போராட்டக் களங்களிலும் மனம் தளராமல் வெற்றி வாகை சூடி தமிழ்நாட்டின் உயர்ந்த ஆட்சி பீடத்தில் அமர்ந்த தகவல்களை  இந்த நுாலில் காணலாம்.  
கடந்த, 1909ல் பிறந்த அண்ணாதுரை, 10 வயதிலேயே நாடகத்தில் ஆர்வம் காட்டி, பின்னாளில்  பெர்னார்ட் ஷா என, போற்றப்பட்டார். அண்ணாவின் நல்லொழுக்கம், கல்லுாரிப் படிப்பு, வாதத்திறன்,  காலம் தவறாமை, பொடிப்பழக்கம், அடித்தட்டு மக்களுக்கான சுயமரியாதை இயக்கம் போன்றவற்றின் தகவல் திரட்டாக அமைந்துள்ளது.
அரசியல் களத்தில் நேர்மையாகப் போராடி படிப்படியாக உயர்ந்த விதம் பதிவாகி உள்ளது.
சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கை, பேருந்துகளில் திருக்குறள் என்று விறுவிறுவென்று ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, உடல்  பலமிழந்த அவர், தம்பிகளுக்கு எழுதிய கடைசி மடல், கல் மனதையும் கரைய வைக்கும்.


–மெய்ஞானி பிரபாகரபாபு