மாபெரும் தமிழ்க் கனவு
அண்ணாவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லும் நல்ல நூல் ஒன்று தமிழில் இல்லை என்ற குரல் நீண்ட காலமாக ஒலித்துவந்த நிலையில், அந்தக் குறையைப் போக்கும் வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது ‘மாபெரும் தமிழ்க் கனவு’.
அண்ணாவின் வாழ்க்கை வரலாறு, சாமானியர்களைப் பிரதிபலித்த ஒரு கட்சியைப் பதினெட்டு ஆண்டுகளுக்குள் ஆட்சியில் அமர்த்தவும், அரை நூற்றாண்டு ஆகியும் அவர் வழிவந்த கட்சிகள் இன்னும் தமிழ்நாட்டில் கோலோச்சவும் அண்ணா அன்று அமைத்த அடித்தளம், அண்ணாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான சொற்பொழிவுகள், அவருடைய சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள், கடிதங்கள், அவருடைய அரிய பேட்டிகள், சமகால அரசியல் சூழலில் அண்ணாவின் அரசியலுக்கான பொருத்தப்பாட்டைப் பேசும் அறிவுஜீவிகளின் கட்டுரைகள் என்று விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.