மாஜி கடவுள்கள்(சீதை பதிப்பகம்)
கடலுக்கும் காற்றுக்கும் நம் பரதகண்டத்தில் மட்டுந்தான கடவுளர் இருந்தனரா? இங்கு மட்டுமே அவர்களுக்குப் புராணங்களும் புனித ஆலயங்களும் பூசாரிகளும் இருந்தனரா? நம் நாட்டவரின் கற்பனைத் திறனைப் போல் வேறு எங்குமே கண்டதில்லை என்பதும் உண்மை தானா? “இல்லை” என்று எடுத்துக் காட்டுகிறார் அண்ணா. கிரேக்க நாட்டிலே, ரோமிலே, பாபிலோனிலே, பிரிட்டனிலே, ஈஜிப்ட்டிலே இன்னும் உலகின் பற்பல பாகங்களிலே நம் தெய்வங்களுக்கு எந்த வகையிலும் எண்ணிக்கையிலும், ஆற்றலிலும் குறைவில்லாத தெய்வங்கள் நிறைந்திருந்தன என்று எடுத்துக் காட்டுகிறார், மாஜி கடவுள்கள் என்ற இந்த நூலில், ஒரு காலத்திலே அவைகளுக்கும் வானளாவிய ஆலயங்கள் இருந்தன; கோலாகலமான பூஜைகள் இருந்தன. ஹோமர் போன்ற பெருங்கவிகள் பாடும் பெருமையையும் அவை பெற்றிருந்தன.‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்ற தமிழரின் செந்நெறி பரவ வழிவகுக்கிறது.