1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு
1929 டிசம்பர் 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடந்த “முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு"
சுயமரியாதை மாநாடு - பார்ப்பன வெறுப்பு அடிப்படையில் நடத்தப்படுவதாகவும், அரசாங்க ஆதரவோடு நடத்தப்படுவதாகவும் - ‘போல்விஷம்’ எனும் மார்க்சிய சிந்தனையை பரப்புவதற்கான மாநாடு என்றும், ஆளுநருக்கு எதிரிகள் புகார் கடிதங்களை அனுப்பினார்கள். ஆனாலும், இது குறித்து கவலை இல்லை என்றும், உயிரையும் கொடுத்து பெறவேண்டியதே ‘சுயமரியாதை’ அது விலை மதிப்பற்றது என்றும் பெரியார் எழுதினார்.
எதிரிகள் நினைப்பதுபோல் சுயமரியாதை இயக் கம் தளர்ந்துவிடாது என்று எழுதிய ‘குடிஅரசு’ (13.1.1929) - “இப்போது எந்தவிதமான மாநாடு எங்கு நடந்தாலும் சுயமரியாதைக் கொள்கைகள் கொண்ட தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டு வருகின்றன” என்று சுட்டிக் காட்டியது.
சுயமரியாதை இயக்கத்துக்கு ருஷ்யா, ஜப்பான், சைனா, துருக்கி, ஈஜிப்ட், ஆப்கானிஸ்தானம் போன்ற நாடுகள், வழிகாட்டி வருவதாகவும் ‘குடிஅரசு’ குறிப்பிட்டது. ‘சுயமரியாதை இயக்கம்’ உலகக் கண்ணோட்டத்தில் தொடங்கப் பட்டிருப்பதை இது உணர்த்துகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.