கம்யூனிஸ்டு அகிலம் வரலாற்று சுருக்கம்
2008ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆழமடைந்து செல்கிற முதலாளித்துவ உலக நெருக்கடி, விட்டுவிட்டு, ஆனால் தொடர்ச்சியாக தீவிரமாக உணரப்படுகின்றது. இவ்வேளையில், முன்பு செயல்பட்ட அகிலங்கள் போன்று, உலக அளவிலான பொதுவுடைமை இயக்கங்களின் கூட்டமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற எண்ணம் வலுத்து வருகின்றது. இந்த வேளையில் வெளிவரும் இந்த நால் கம்யூனிஸ்டு அகிலம் அல்லது மூன்றாம் அகிலம் அல்லது காமிர்ண்டான் என்றும் அழைக்கப்பட்ட உலகப் பொதுவுடைமை இயக்கங்களுடைய கூட்டமைப்பின் சுருக்கமான வரலாறு ஆகும். கம்யூனிஸ்டு அகிலம் 1919 முதல் 1943 வரை செயல்பட்டது. இந்தக் காலத்தில் உலகப் புரட்சி இயக்கங்கள் முகம் கொடுத்த சிக்கல்கள், அவை குறித்து எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றிய ஆழமான சிந்தாததை இந்நூல் வழங்குகின்றது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.