அண்ணா ஒரு சகாப்தம்
இருபதாம் நூற்றாண்டின் தென்னக அரசியலின் விடிவெள்ளிய இலக்கியவானின் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா . கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் மந்திரத்தை முன்வைத்து உழைப்பு என்னும் உயிர்த்துடிப்பை உணவாக்கி நின்றதால் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியவர். தமிழ்மொழிக்கு அடுக்குமொழி நடை என்னும் உயிர்த்துடிப்பை ஊட்டி கேட்போரை மட்டுமன்றி கேளாதோரையும் கட்டிப்போட்ட காலக்கொடைதென்னாட்டுக் காந்தி என்னும் தித்திக்கும் பெயரால் அழைக்கப்பட்டவர். மேடைத் தமிழுக்குப் புதுமெருகு ஊட்டியவர். முதன்முதலில் தமது பேச்சுக்குக் கட்டணச் சீட்டு விற்று வருவாய் ஈட்டி கட்சியை வளர்த்து ஆட்சியைப்பிடித்த அருந்தமிழ்வாணர். கவிதை, கட்டுரை, நாடகம், புதினம், பத்திரிகை, நடிப்பு, திரைக்கதை எனப் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர். தமிழில் மட்டுமா? ஆங்கிலத்திலும் ஆங்கிலேயரும் வியக்கும்படி பேசும் வித்தகர். அவர் பெயரைத் தாங்காத தென்னகக் கட்சிகளே இல்லை என்னும்படி அனைவருக்கும் அண்ணாவாக இருந்ததால் அவர் ஒரு சகாப்தமாகி விட்டார். அந்த வகையில் அண்ணாவின் பல்வேறு சிறப்புகளை பல்லறிஞர் மூலம் தொகுக்கப்பட்ட தொகுப்பே 'அண்ணா ஒரு சகாப்தம்' என்னும் இந்நூல்.
ராஜசேகர் அவர்களது அரிய முயற்சியால் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் பல்வேறு பரிமாணங்கள் இந்நூலின் மூலம் வெளிப்பட்டிருப்பதால் அண்ணா மக்களிடமும் அறிஞரிடமும் எவ்வாறு பதியமாகிச் சகாப்தமாகத் திகழ்கின்றார் என்பதை நூலைப் படிப்போர் அறிய முடியும். அண்ணாவைப் பற்றிய சிறந்த கருத்துத் தொகுப்பு நூலாக அமைந்துள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.