என் நினைவில் சே
மாபெரும் வரலாற்று நாயகனின் காதல் வாழ்க்கை.... தங்களுடைய அற்புதமான காதலை கியூபப் புரட்சிப் போரின்போது ஒரே குழுவைச் சேர்ந்த கொரில்லாக்களாக முதன்முதலாகச் சந்தித்துக் கொண்ட நாட்களில் தொடங்கி பத்து ஆண்டுகள் பூர்த்தியடையாத ஒரு காலகட்டத்தில் பொலிவியாவில் சே படுகொலை செய்யப்பட்டதைக் கேள்வியுற்ற துயரமான கணம்வரை அவர்கள் இணைந்து நடத்திய வாழ்க்கையினூடாக அவர் விவரிக்கிறார்.
அலெய்டா மார்ச், சே குவேராவின் இரண்டாவது மனைவி. நான்கு குழந்தைகளுக்குத் தாய். கியூபா புரட்சிப் போரில் தலைமறைவு இயக்கத்திலும், கொரில்லா குழுவிலும் பணியாற்றியவர். கியூபாவின் பெண்கள் அமைப்பிலும், கல்வித்துறை , அயலகத்துறை ஆகியவற்றிலும் பணியாற்றியவர். தன் நினைவில் படிந்து நிற்கும் சேவை இந்த நூலில் பகிர்ந்துகொள்கிறார். கண்டிப்பான தலைவராக, கறாரான போராளியாக உலகம் அறிந்த சேவின் மற்றொரு பரிமாணத்தை நம்முன் திறந்து காட்டுகிறது அவரது நினைவுகள். குறுகிய கால குடும்ப வாழ்க்கையே என்றபோதிலும், சேவுடனான அன்பும் நெருக்கமும் மிக்க அன்றாட வாழ்க்கைப் போக்கைப் பதிவுசெய்துள்ளார்.