அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
‘நமது தமிழ்மண்’ இதழில் தோழர் பிரேம் எழுதிய ‘அயோத்திதாசரின் அறப் புரட்சி’ என்னும் தொடர், அயோத்திதாசரின் சிந்தனைகளை, சமகாலக் கருத்தாக்கங்களுடன் ஒப்பாய்வு செய்கிறது. குறிப்பாக, பழமைவாத இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிராக அயோத்திதாசர் முன்னெடுத்த கருத்தியல் போராட்டங்களையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும்
ஆழமாகவும் விரிவாகவும் ஆய்வு செய்கிறது.
இந்தப் படைப்பு பண்டிதர் அயோத்திதாசரை ஒரு புதிய பரிமாணத்தில் படம் பிடித்துக் காட்டுகிறது. தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக, தலித் அரசியல் அரங்கில் இந்நூல் குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்தும்! பண்டிதர் அயோத்திதாசர் குறிப்பிட்ட ஒரு சாதிக்கான அடையாளம் அல்ல; ஒடுக்கப்பட்ட சமூக விடுதலைக்கான கோட்பாட்டு அடையாளம் என்பதை இந்நூல் அழுத்தமாக அடையாளப்படுத்துகிறது.
தொல்.திருமாவளவன்