ஆண்மையின் ஆட்சியில்
"வணிக ரீதியான வாடகைத்தாய் முறையைத் தடை செய்வது தீர்வாகாது. இதனை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் முழுமையாகத் தடை செய்து விட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை எது நல்லதோ அதை வைத்து, மீண்டும் பிற்போக்காக, திருமணமாகி இருக்க வேண்டும், வாடகைத் தாய்க்கு ஏற்கனவே குழந்தை இருக்க வேண்டும், மருத்துவச் செலவினங்களை மட்டும் கொடுத்தால் போதும் என்பன போன்ற வரையறைகளைக் கொண்டு இச்சட்டத்தை இயற்றியிருக்கிறார்கள்."
-தோழர் அஜிதா
"'ஆண்மை' என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது. அந்த 'ஆண்மை' உலகிலுள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதை பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உலகத்தில் "ஆண்மை" நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் "ஆண்மை" என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி."
-தந்தை பெரியார்
"வாடகைத்தாய் முறை மூலம் பிள்ளைப் பெற்றுகொள்ளும் நடைமுறையானது, ஏற்கெனவே உள்ள திருமண உறவுக்குள் மாத்திரமே கர்ப்பம் தாங்கி பிள்ளை பெறவேண்டும் என்கின்ற அடிப்படையில் பெண்ணின் கற்புக் கோட்பாட்டுடன் தொடர்புள்ள மரபுக்கு எதிரானது; மாற்றானது; மற்றும் முற்போக்கானது. இந்த நடைமுறை கர்ப்பம் தாங்காமலேயே தனக்கு ஒரு குழந்தையை உறவாக, ஆதரவாக வளர்ப்பதற்கு உரிமையளிக்கிறது. ஆண்களைச் சாராமல் வாழ்வதற்குப் பெண்களுக்கும், பெண்கள் தயவின்றியே குழந்தை பெற்று வளர்ப்பதற்கு ஆண்களுக்கும் இந்நடைமுறை வழி செய்கிறது. இந்நிலை அய்யத்துக்கிடமின்றி பெரியாரின் கனவை நிறைவேற்றிடும் பாதையேயாகும்."
- தோழர் ஓவியா
"ஒரு மனித உடல் மாறிக்கொண்டே வருகிறது. ஒரு குழந்தையாக பிறந்து, வளர்ந்து, பருவம் எய்தி, நடுத்தர வயதை அடைந்து, முதுமை அடைகிறது. ஆய்வுகள் படி பாலியல் தேவை என்பது 9 வயதிலிருந்தோ 12 வயதிலிருந்தோ ஆரம்பிக்கிறது. ஆயுள் காலம் முழுவதும் தொடர்கிறது. வேறு வேறு அளவுகள் இருக்கலாம். வேறு வேறு விதமானதேவைகள் இருக்கலாம். குறிப்பிட்ட காலத்தில்தான் பாலுணர்வோடு இருக்க வேண்டும். இந்தக் காலக்கட்டத்தில் துறவறம் பூண்டிருக்கவேண்டும் என்றெல்லாம் யாரையும் நாம் வற்புறுத்த முடியாது. அது இயற்கைக்கு முரணானது."
- மருத்துவர் பூங்குழலி
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.