நிலவு எனும் கனவு
இஸ்ரோ விஞ்ஞானியான இந்த நூலின் ஆசிரியர், நிலவு தொடர்பான அத்தனை தகவல்களையும் தமிழில், சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் தந்து இருக்கிறார். பூமியின் துணைக்கோளான நிலவு எவ்வாறு உருவானது? அது புவியுடன் ஒத்திசைவில் இருப்பது எப்படி? அமாவாசை, பவுர்ணமி - நிகழ்வது எவ்வாறு? போன்றவற்றை நடைமுறைச் சம்பவங்கள் ஒப்பீட்டுடன் தெளிவு படுத்தி இருக்கிறார். கடலில் அலைகள் எப்படி உருவாகின்றன? மாதந்தோறும் கிரகணங்கள் ஏற்படாதது ஏன்? என்பவற்றையும் விவரித்து இருக்கிறார். விண்வெளிக்கும், நிலவுக்கும் தொடக்க காலம் முதல் மேற்கொள்ளப்பட்ட பயண விவரங்களும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. நிலவில் குடியேற்றம் நடைபெற வாய்ப்பு உள்ளதா என்பதும் சொல்லப்பட்டு இருக்கிறது. நிலவு ஆய்வு குறித்த அபூர்வ படங்களையும் தந்து இருப்பது சிறப்பு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.