கேளுங்கள்! சொல்கிறேன்…
கேளுங்கள்! சொல்கிறேன்…
திமுக இளைஞரணி உருவாகிய போது திருச்சி மாநாட்டில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட போது, அதில் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தவர். திராவிட இயக்கக் கருத்துகளை, தாய்மொழி பற்றிய உணர்வுகளை எடுத்துச் சொல்வதில் தனி ஆர்வம் கொண்டவர். இந்நூல் முழுவதும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசியல் ரீதியாகவும் இலக்கிய நயத்தோடும், பொருத்தமாகவும். நேர்மையாகவும். உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து பதில் சொல்லியிருக்கிறார் திருச்சி சிவா அவர்கள். அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமல்ல. இன்றைய இளைய தலைமுறை மட்டுமல்லாது அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
ஆர்.நல்லகண்ணு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.
தி.மு.கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக, நான்காவது முறை நாடாளுமன்ற உறுப்பினராக. நாடறிந்த பேச்சாளராக. கண்ணியமிக்க அரசியல்வாதியாக இன்று வளர்ந்து நிற்கும் திருச்சி சிவா, கடந்து வந்த பாதையை மட்டுமின்றி, நடந்து கொண்டிருக்கும் நாள்களின் அரசியலையும் சேர்த்து இந்தப் புத்தகத்தின் நேர்காணல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன! இந்த நேர்காணல்களைப் படிக்கும்போது. அவருடைய விரிந்து பரந்த அறிவு. நாடாளுமன்றத்தில் அவர் கொண்டுவந்து குறிப்பிடத்தக்க சில தனி நபர் தீர்மானங்கள் பலவற்றையும் உள்வாங்கிக்கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது! அப்படிப்பட்ட ஒருவரின் நூலுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பை பெற்றதில் நான் பெருமிதம் கொள்கிறேன்!
சுப.வீரபாண்டியன் தலைவர். திராவிட இயக்கத் தமிழர் பேரவை.
இது கைக்கடக்கமான நூல். விறுவிறுவெனப் படித்து, பக்கங்கள் தீர்ந்துபோனதும் திருச்சி சிவா அவர்களுடன் நேரில் பேசிய ஒரு நிறைவு கிடைத்துவிடுகிறது. அவரிடம் இன்னும் என்னென்னவோ கேட்க வேண்டும்போல் தோன்றுகிறது. இதுதான் இந்த நூலின் வெற்றி. ஒரு முக்கியமான தமிழ்நாட்டு அரசியல்வாதியின் சமூகம் சார்ந்த கருத்துகளை அறிய. கட்சி பேதமின்றி எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
கோ.திலகவதி ஐ.பி.எஸ் மேனாள் காவல்துறை இயக்குநர், தமிழ்நாடு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.