எச்சிலில் உருள்வது யாரால்?
அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதத்தின்படி மக்களுக்கு பகுத்தறிவூட்டி மானமும் அறிவும் மிக்க சமுதாயமாய் இந்த திராவிட சமுதாயத்தை உலகிலுள்ள பிற சமுதாயத்திற்கு ஒப்பாக கொண்டு வர மூத்திரசட்டியை சுமந்து கொண்டு நாத்தழும்பேற தன் வாழ்நாளெல்லாம் பரப்புரை செய்த தந்தை பெரியாரின் வழியில் பீடுநடைபோடும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் கோரிக்கை மனுவை உள்ளடக்கியதே இந்த சிறு வெளியீடு.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் அவர்களின் மூடத்தனமான திர்ப்பை கேள்விக்குள்ளாக்கி உச்சநீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற கோரிக்கை மனுவும் அதோடு பார்ப்பனர் உண்ட எச்சில் இலையில் உருண்டு புரள்வது புண்ணியம் என்று கட்டமைத்து வைத்திருக்கும் சனாதனத்தை கேள்விக்குள்ளாக்கி மக்களை கண்ணியத்தோடு வாழ வைக்க வேண்டிய முயற்சியின் ஓர் அங்கமே இந்த வெளியீடு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.