தமிழரின் தத்துவ மரபு (பாகம் - 1) - ஒரு தத்துவக் கலைக்களஞ்சியம்
உலகாயுதம், சாங்கியம், நியாயம், வைசேடிகம், மீமாம்சம், வேதாந்த உபநிடத மரபு, சமணம், பவுத்தம், ஆசீவகம் போன்ற வடஇந்தியாவிலிருந்து வந்த தத்துவங்கள் முதல் வெளிநாடுகளிலிருந்து வந்த கிறிஸ்தவம், இஸ்லாம், மார்க்சியம் போன்ற தத்துவங்களையும் எதிர்கொண்டு, தரிசித்து, உள்வாங்கியதிலும் வெளிப்படுத்தியதிலும் கிளைபரப்பியதிலும் தமிழர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை தமிழ் இலக்கியத்திலும் பல்வேறுவகை தத்துவ மரபுகளிலும் தனக்குள்ள ஆழமான புலமையின் வழியாக நமக்குக் கற்றுத்தரும் சீரிய பணியை மேற்கொண்டிருக்கிறார் நூலாசிரியர்.
தமிழகத்தில் எந்தவொரு மார்க்சியவாதியோ அல்லது மார்க்சியவாதி அல்லாதவரோ இதுவரை படைத்திராத ஒரு தத்துவக் கலைக்களஞ்சியத்தைப் படைத்துள்ள அருணன் வந்து சேரும் முடிவு முற்றிலும் ஏற்கத்தக்கது: "தத்துவத்தை வர்ணாசிரம ஆதரவு தத்துவம், வர்ணாசிரம எதிர்ப்புத் தத்துவம் என்று பிரித்து வைத்துக்கொள்வது இன்றைய சமுதாயத்தை முன்னெடுத்துச் செல்ல அறிவுலகில் பெரிதும் உதவும்.'
- "இந்தியா டுடே' ஏட்டில்
பிரபல ஆய்வாளர் எஸ்.வி. ராஜதுரை