Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

புரட்சியாளர் பெரியார் (தமிழ்க் குடியரசு பதிப்பகம்) - பதிப்புரை

பதிப்புரை

தாமரைத்திரு நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் 1929 இல் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே கலந்து கொண்டவர்.

தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பு கொள்கையை ஏற்றுக் கொண்டு, குஞ்சிதம் அம்மையாரின் தங்கை காந்தா அவர்களை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.

தமிழக கல்வித்துறையில் பல ஆண்டுகள் இயக்குநராகப் பணி யாற்றியவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் துணைவேந்தராகப் பணியாற்றிவர்.

தந்தை பெரியாரின் நூற்றாண்டை ஒட்டி சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பெரியார் அறக்கட்டளை சொற் பொழிவுகள் மூன்று நாள் நிகழ்த்தினார். அதன் விரிவாக்கமே 'புரட்சியாளர் பெரியார்' என்ற இந்நூலாகும்.

நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் நூல்களை நாட்டுடமை யாக்கிய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நன்றி.

தமிழ்க் குடி அரசு பதிப்பகத்தின் சார்பில் இந்நூலை வெளி யிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வாலாசாவல்லவன்.

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு