நெஞ்சுக்கு நீதி பாகம் - 3 - பதிப்புரை
பதிப்புரை
கலைஞரின் சுயசரிதமான 'நெஞ்சுக்கு நீதி' முதலிரண்டு பாகங்களையும் படித்த எமது வாசகர் களுக்கு இந்த மூன்றாவது பாகத்தையும் தருவதற்கு மிகவும் பெருமைப் படுகிறோம்.
டாக்டர் கலைஞரின் வரலாறு என்பது தமிழக வரலாறு மட்டுமல்ல; இதுவோர் இந்திய வரலாறும் ஆகும். ஆம்! அடிமையுண்ட இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே கலைஞரின் வரலாறு ஆரம்ப மாகிறது. எனவே, இது இந்திய வரலாற்றின் குறியீடும் ஆகும். இதனை முதல் இரண்டு பாகங்கள் தெளிவாக்குகின்றன.
இந்திய தேசியத்தின் எழுச்சியும், வளர்ச்சியும், திராவிட இயக்கத்தின் எழுச்சி வளர்ச்சி அதன் வீரார்ந்த தன்மை ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்து சுவை படுவது கலைஞரின் சுயசரிதம்.
சூடும் சுவையும் கொண்ட இருபதாம் நூற்றாண் டின் தமிழக வரலாற்றை ஆராயப்படும் மேலோருக்கு இந்நூல் பெரிதும் துணை நிற்கும் என்று நம்புகிறோம்.
இத்தகைய சிறப்புடைய நூலை வெளியிட அனும தியளித்த காவிய நாயகர் கலைஞருக்கு பெரிதும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம்.
வழக்கம் போல் வாங்கிப் பயனடைந்து எம் நிறுவனத்தைப் பெருமைப்படுத்தும் வாசகர்களையும் நினைவு கூறுகிறோம்.
இந்நூல் வெளிவருவதற்குக் காரணமாக அமைந் தவர் திரு. சண்முகநாதன் ஆவார். எனவே அவரை அன்புடன் நினைவுகூர்கிறோம்.
திருமகள் நிலையம்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: