Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? - 5 தொகுதிகள் - முன்னுரை

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? - 5 தொகுதிகள் - முன்னுரை

தலைப்பு

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? - 5 தொகுதிகள்

எழுத்தாளர் பெரியார்|பசு.கௌதமன்
பதிப்பாளர்

நியூ சென்சுரி புக் ஹவுஸ்

பக்கங்கள் -
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2018
அட்டை தடிமன் அட்டை
விலை Rs.4,800/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/naan-sonnaal-unakku-yen-kobam-vara-vendum-5books.html

 

முன்னுரை

1925-லிருந்து 1973 வரை மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, தத்துவம் குறித்தும் தந்தை பெரியார் எழுதியவையும் பேசியவையும், சித்திரபுத்திரன் என்ற பெயரில் எழுதியவையும் ஐந்து தொகுதிகளாகக் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் குறித்த பெரியாரின் பதிவுகள் 'மொழி' என்ற பெயரில் முதல் தொகுதியாகவும், மநுதர்மம், கீதை, இராமாயணம், தமிழ் இலக்கியங்கள் போன்றவை பற்றிய பெரியாரின் விமர்சனப் பதிவுகள் இலக்கியம்' என்ற தலைப்பில் இரண்டாவது தொகுதியாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இசை, நாடகம், சினிமா, இதழியல் ஆகியவற்றில் தந்தை பெரியாரின் பதிவுகளோடு பிறரின் நூல்களுக்கு அவர் வழங்கிய மதிப்புரைகள், அறிமுக உரைகள் போன்றவை ஏராளமானவை. அவற்றோடு, தமிழர் திராவிடர் பழக்கவழக்க, பண்பாட்டுக் கூறுகள், அவை பார்ப்பனியத்தால் எவ்வாறு தன்வயப்படுத்தப்பட்டன என்பது பற்றிய பதிவுகளும் 'கலையும் பண்பாடும்' என்ற தலைப்பில் மூன்றாவது தொகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

தத்துவத்துக்கு மத வர்ணம் பூசப்பட்டது எப்படி என்பது குறித்து பெரியார் பல்வேறு சமயங்களில் எழுதியும் பேசியுமிருந்திருக்கிறார். அத்துடன் அவர் எழுதிய இரங்கல் செய்திகள், பெட்டிச் செய்திகள், துணுக்குகள், சொற்சித்திரங்களாக 'தத்துவம் சொற்சித்திரம்' என்ற தலைப்பில் நான்காவது தொகுப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் எழுதிய எழுத்துக்கள் மிகவும் வீரியமுள்ளவை. அன்றைய அரசியலையும் சமூகச் சூழலையும் பல்வேறு பாத்திரங்கள் வழியே நக்கலும் நையாண்டியுமாக அவர் பதிவு செய்திருக்கும் விதம் அலாதியானது. அவை முழுவதுமாக சித்திரபுத்திரன் பதிவுகள்' என்ற தலைப்பில் ஐந்தாவது தொகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு