Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

ஜோதிராவ் புலே - தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்

ஜோதிராவ் புலே - தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்

தலைப்பு ஜோதிராவ் புலே - தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
எழுத்தாளர்  G.P.தேஸ்பாண்டே
பதிப்பாளர் பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் 336
பதிப்பு முதற் பதிப்பு - 2016
அட்டை காகித அட்டை
விலை ரூ.250/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/jothirao-phule-theruvu-seyyappatta-padaippugal.html


நூல்களின் தேர்வு பற்றிய குறிப்பு ஜோதிராவ் புலேயின் முக்கியமான கட்டுரைகளை இந்நூலில் சேர்த்துள்ளோம். அவரது எழுத்திலும் எண்ணத்திலும் மையமாக விளங்குவது 'குலாம்பரி' (Gullangir), ஷேத்கார்யாச்ச ஆசுத் (Shetkaryacha Asud) என்ற இரண்டு நூல்களே. அவை இரண்டும் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இந்த இரண்டு உரைநடை நூல்களில் உள்ள பல கருத்துக்கள் அவரது 'சர்வஜனிக் சத்யதர்ம புஸ்தக்' என்ற நூலிலுள்ள கருத்துக்களையே திரும்பச் சொல்வதால், அந்நூலிலிருந்து சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகள் மட்டும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. சத்சார் என்ற பகுதியில் மிகச் சிறிய அளவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சேர்க்காமல் சில பகுதிகள் விடப் பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுவதற்காக […] என்ற குறியீடு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. மிக முக்கியமாக எழுந்த சில கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில், பல கட்டுரைகளை மிகவும் சுருக்கமான வடிவில் புலே எழுதியுள்ளார். அவற்றை நாம் இதில் சேர்த்துக்கொள்ளவில்லை. அவரது சொந்த எழுத்துக்களில் ஒன்றான அவரது உயில் இதில் இடம்பெறவில்லை .

அவரது கவிதைகள் இந்நூலில் இடம்பெறவில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு. மிக முக்கியமானது இப்புத்தகத்தின் விலையைப் பற்றியது. சாதாரண வாசகன் கையிலும் இப்புத்தகம் தவழ வேண்டும் என்பது நமது அவா. அடுத்தபடியாக மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிரமம். புலேயின் உரைநடை எழுத்துக்களை மொழிபெயர்ப்பதே சிரமம். கவிதை என்றால் அதனினும் கடினம். அவரது மொழி, அரசியல் சார்ந்துள்ளது (காண்க. முன்னுரை). நமக்குத் தெரிந்த வரையிலும் அவரது கவிதைகளை மொழிபெயர்ப்பது மிகவும் சிரமம். இதில் இன்னொரு சிரமமும் உள்ளது. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் துக்காராமின் கவிதைகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாக 1) ள்ளது. பக்தி இலக்கியத்தைப் போல, புலேயின் பாடல்களும் சாதாரண மக்களுக்கு படிப்பினையைப் பரப்புவதாக உள்ளன. குலாம்கிரியிலும், ஆசுத்திலும் உள்ள அதே கருத்துக்களே அவரது பாடல்களிலும் உள்ளன. அவரது நாடகத்திலும் (அ) யே (2) ள்ளன. ஆழமான ஆய்வுக் கருத்துக்கள் மிக எளிய மக்களும், 4 அடி மட்டத்திலுள்ளவர்களும் புரிந்துகொள்ளும்படியாக மிகக் கவனமாக நாடகம் எழுதப்பட்டுள்ளது. இவற்றை மொழிபெயர்ப்பது அவசியமல்ல என்பது இதன் பொ(II)ளல்ல), புலேயின் அனைத்து எழுத்துக்களும் ஆங்கிலத்தில் கிடைக்கும் | படி யாக மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஒரு நாள் இது நடைபெறும் என்பது திண்ணம்.

புலே சில நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். அவை அனைத்தும் மூல நூலில் இருந்தபடியே பதிப்பிடப்பட்டுள்ளன. (வார்த்தைகளில் காணப்படும் எழுத்துக்கள், capitalisation எல்லாம் அப்படியே பாதுகாக்கப்பட்டுள்ளன.) மூல நாலின் வார்த்தைகளில் விடுபட்டுள்ள எழுத்து [ ] என்ற அடைப்பிற்குள் கொடுக்கப்பட்டுள்ளது. மகாத்மா புலே சமாக்ர வாங்மயா (மகாத்மா புலேயின் தொகுக்கப்பட்ட நூல்கள்) மும்பை, 1969, ஒய்.டி.பாட்கேயின் நான்காவது பதிப்பு 1991 என்ற நூலிலிருந்து சில கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையின் மொழிபெயர்ப்பாளரும், தனியே அடையாளம் காட்டப்பட்டுள்ளார். மராத்திய மொழியின் வார்த்தைகள் இத்தாலிய* பதிப்பு வார்த்தைகள் போன்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பிற இந்திய மொழியின் வார்த்தைகள் ரோமன்' பதிப்பு வார்த்தைகளிலும் கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக எளிதில் புரியக்கூடிய யாத்ரா என்ற வார்த்தை ரோமன் எழுத்துக்களில் தரப்பட்டுள்ளது. ஆனால் 'வாரி' என்ற அதிகம் புழக்கத்திலில்லாத வார்த்தை இத்தாலிய அச்சுரு படிம் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில வார்த்தைகளோடு குழம்பிப் போகும் வார்த்தைகளும் இத்தாலிய அச்சுரு படிம் வகையில் உள்ளன. கிராம் (gram = கிராமம் என்ற வார்த்தை இத்தாலிய அச்சுரு படிம் வகையில் பண்ணப் பட்டுள்ளது. ஜாதியைக் குறிக்கும் பெயர்கள் இத்தாலிய அச்சுரு படிம வகையில் பண்ணப்படவில்லை. சுத்தார் என்ற சொல் ஜாதியைக் குறிப்பதற்கு உபயோகப் படுத்தப்படும்போது, ரோமன் எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரைக்கும் பதிப்பாளரின் சிறிய முன்னுரை சேர்க்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் சூழமைவும் விளக்கப்பட்டுள்ளது. கட்டுரைகள் எழுதப்பட்ட காலவரிசைப்படி தரப்பட்டுள்ளன.

இரண்டு வகையான குறிப்புக்களை இந்நூலில் காணலாம். புலேயின் குறிப்புக்களைப் பக்கங்களின் அடிப்பகுதியில் காணலாம். பதிப்பாளரின் குறிப்புக்களும் விளக்கங்களும் இடது அல்லது வலது பக்க ஓரங்களில் காணலாம்.

இந்தியாவில் ஜாதி எதிர்ப்பு பற்றிய முறையான விதியை உருவாக்கியதில் முதன்மையானவர் ஜோதிராவ் புலே (1827 – 1890). பத்தொன்பதாம் நுாற்றாண்டில் அதை எதிர்த்தவர்களில் மிகவும் முற்போக்கானவர். அடக்குமுறை செய்யும் அதன் கட்டுமானம் முழுமையாக நொறுக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் வேண்டாதவர். அவர் எழுதிய முக்கியமான அனைத்து உரைநடை நூல்களையும் தமிழில் முதன்முதலில் கிடைப்பதற்கு இந்நூல் வழிவகுத்துள்ளது. மிகச் சிறப்பாக மேற்கோள் காட்டப்படும் இந்நூலுக்கான மொழிபெயர்ப்புகள் அனைத்தும் பிரத்யேகமாகச் செய்யப்பட்டவை. பதிப்பாசிரியரின் முன்னுரையில் புலேயின் வாழ்க்கை, நுால் மற்றும் எண்ணம், அத்துடன் ஒவ்வொரு நாள் குறித்த சரித்திரக் கண்ணோட்டம் ஆகியவையும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. சாதி பற்றிய ஆய்வில் ஈடுபாடு கொண்ட எவருக்கும் ஒதுக்கப்பட முடியாத வளமாகும் இந்நூல்.

ஜி.பி.தேஷ்பாண்டே . (1938 - 2013): மராத்திய நாடக ஆசிரியர், தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர், அரசியல் ஆய்வாளர்.

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

 

ஜோதிராவ் புலே - தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் - நன்றி

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு