Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

இனமானப் பேராசிரியர் வாழ்வும்-தொண்டும் - வாழ்த்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
வாழ்த்துரை

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி எம்.ஏ.,பி.எல்., 

தந்தை பெரியார் அவர்களை, “தமிழகத்தின் முதல் பேராசிரியர்” என்று அழைத்தார் அவர்தம் தலைமாணாக்கரான அறிஞர் "அண்ணா அவர்கள். அந்த முதல் பேராசிரியரின் மாணாக்கர்கள் எல்லாம் தலைசிறந்தவர்களாக, "மானமிகு சுயமரியாதைக்காரர்களாக, பேராசிரியர்களாக, ஆசிரியர்களாக திராவிடத்தில் மலர்ந்து, காய்த்து, கனிந்து சுனவ தந்தவர் - தருபவர் எண்ணற்றவர்கள்.

’தந்தை' என்றாலும் 'அய்யா' என்றாலும் பெரியாரைத்தான் குறிக்கும்;

அறிஞர் என்றால் அண்ணாவைத்தான் குறிக்கும், கலைஞர் என்றால் தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்களைத்தான் குறிக்கும் என்பதுபோல் “பேராசிரியர்' என்றால் அது நமது மானமிகு கொள்கைவேள் அன்பழகனாரைத்தான் சுட்டும்,

அதிலும்கூட வெறும் பேராசிரியர்' அல்ல அவர்; இனமானப் பேராசிரியர் என்ற சிறப்புத் தகுதியே அவரைத் தமிழ்கூறும் நல்லுலகம் அடையாளமிடும்.

அவரது மாணவப் பருவம் தொட்டே அவரது தந்தையார் (துவக்கத்தில், 'கதர்' கல்யாணசுந்தரனாராக இருந்து, தந்தை பெரியார் கொள்கை வயப்பட்டு, சுயமரியாதை இயக்கச் செம்மலாக மாறினார், தந்தை பெரியாரின் மெய்க்காவலராகவே அந் நாளில் விளங்கிய மாமனிதர் மாயூரம் சி.நடராசன், அவர்கள் இருவருக்கும் இருந்த நெருங்கிய உறவும் சேர்ந்து இவரைக் கொள்கையின்பால் ஈர்த்துவிட்டது!

நான் பள்ளிப் பருவ மாணவனாக இருந்த காலம் முதற்கொண்டே - அப்போது அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் – நாவலர் நெடுஞ்செழியன், புலவர் மா.நன்னன் போன்ற திராவிடப் போர் முரசுகள் இளைாந்து இலட்சியப் பயணம் செய்த நாளிலேயே - எனது ஆசான் ஆ .திராவிடமணி அவர்கள் கடலூருக்கு இவர்களை அழைத்து, திராவிடர் கழகக் கூட்டங்களில் உரையாற்றும்படிக் கேட்டுக்கொள்வார். அவர்தம் மாணாக்கர்கள் ஆள் நாங்கள், இவர்களை வரவேற்று, கவனித்து, உபசரித்து, தங்கவைத்து வழியனுப்பும் பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் எங்களை ஒப்படைப்போம்!

போக, வர ரயில் கட்டணம் - அது தவிர ஒரு ரூபாய் அந்நாளில் இதுதாள் ஆசிரியர் திராவிடமணி இந்தப் பெரும் பேச்சாளர்களுக்கு அளித்த தொகை மகிழ்ச்சியோடு, எளிமையான பழக்க வழக்கங்களினால் அவர்கள் அதை ஏற்று. பணி செய்து திரும்புவர்.

அந்நாளிலிருந்து - சுமார் 70 ஆண்டுக் காலம் இனமானப் பேராசிரியர் அவர்களை அறிவேள்; அவரது மடைதிறந்த பேச்சு எங்கள் வாயில் ஈ புகுந்தாலும் தெரியாதவாறு "மெய் மறக்கச் செய்யும் கருத்தாழம் மிக்கப் பேச்சு!

அவரது பேச்சை எந்தக் கழகப் பேச்சாளர்களும் எளிதில் “இமிடேட்' செய்துவிட அதே பாணியில் பேசிட முடியாது. அது ஒரு தனித்தன்மை கொண்டது!

அதுபோலவே அவரது பழகும் தன்மையுங்கூட 'தனிரகம்' ஆகும்.

உள்ளொள்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாதவர்; மனதில் பட்டதை யாருக்காகவும், எதற்காகவும் எப்போதும் மறைத்துப் பேசியறியாத 'பொய்யாது ஒழுகும் பெருந்தகையாளர்' நம் இனமாளப் பேராசிரியர். அவர் ஓர் ‘ஏகக் கொள்கை விரதர்' என்றும்!

தந்தை பெரியார்தம் கொள்கை வயப்பட்டு, அண்ணாவின் அன்பையும் பாசத்தையும் பெற்று, இன்றும் கலைஞருக்கு உற்ற தோழராக, துணைவராக " அதேநேரத்தில் தலைமையை மதிப்பதில் தன்னிகரற்றவராகத் திகழ்பவர்!

முதுமை அவரை உடலால் சிற்சில நேரங்களில் பாதித்திருக்கலாமே தவிர, முதிர்ச்சியே அவரை நாளும், கொள்கை உணர்வு என்ற மெருகேற்றி மேதினி மெச்சச் செய்கிறது!

திராவிட இயக்கத்தின் அரிய சொத்து - பாதுகாத்துப் பெருமைப்படவேண்டிய "வைப்பு நிதி' நம் பேராசிரியர்!

அவர்தம் பொழிவுகள் கொட்டும் அருவியெனக் கொள்கைப் பிரச்சார வெள்ளமெளப் பெருக்கெடுத்தோடி, பதவி அரிப்பு என்ற அழுக்குகளைக் கழுவி, திராவிட இயக்கத்தவரைத் தூய்மைப்படுத்த உதவும் அருமையான மாமருந்துகளாகும்!

தந்தை பெரியார் போலவே அவரது ஆயுள் நீளும் நிலையில், அவர் ஒதுங்கி ஓய்ந்து விடவில்லை; தொண்டறம், பிரச்சாரம் மூலம் சுயமரியாதை உலகு நோக்கிய பயணத்திற்கு நம் மக்கuைT - இளைஞர்களை ஆயத்தப்படுத்துகிறார்.

அவர்தம் மணிவிழாவை ஈரோட்டில் திராவிடர் கழகம் தனியான ஒரு மாபெரும் விழா எடுத்து - மாநாடு போல் நடத்திப் பெருமை பெற்றது!

எதிர்பாராத ஒரு வரலாற்று நிகழ்வு டிசம்பர் 19ஆம் தேதி. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தம் இறுதி முழக்கம். அன்றுதான் நம் இனமானப் பேராசிரியர் பிறந்த நாள்! அவர் முழக்கம் இவர் மூலம் தொடருகிறது என்பதும் வரலாற்றின் புதுமை அல்லவோ!

கழக இளைஞர்கள் அவரது நுண்மாண் நுழைபுலம் - கொள்கை அறிவுரைகளைக் கேட்டுப் பயன் பெறுவதோடு, எளிமையும் வெள்ளை உள்ளத்தையும்கூடப் பின்பற்ற முயற்சித்தால், அது அவருக்குப் பெருமை என்பதைவிட, இளைஞர்கள் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், வாழ்வுக்கும் சிறப்பு ஆகும்!

நம் இனமானப் பேராசிரியர் அவர்கள் மிகுந்த தன்னடக்க உணர்வு கொண்ட தன்மான வீரர் என்பதால், அவரது வாழ்க்கைக் குறிப்புகள் கொண்ட இதுபோன்ற ஒரு நூs160க்கூட கொணர் - அதன் தொகுப்பாளர்களான பெருமதிப்பிற்குரிய கொள்கையாளர்கள் வழக்குரைஞர் அர.சனகன் அவர்களுக்கும், பேராசிரியர் முனைவர் நகமங்கள முருகேசன் அவர்களுக்கும் எளிதில் இசைவளிக்கவில்லை,

இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களது வாழ்க்கை வரலாறும், அதன் வரலாற்றுச் சுவடுகளும் இன்றையத் தலைமுறைக்கும், இளிவரும் தலைமுறைக்கும் கூடச் சிறந்த இயக்கச் சாதனைச் சரித்திரமான நல்லதோர் ஆவணத் தொகுப்பாகும்.

நூல் ஆசிரியர்கட்கு நன்றியும் பாராட்டும்!
வாழ்க வாழ்க பல்லாண்டு - எங்கள் இனமானப் பேராசிரியர்!

கி.வீரமணிதலைவர்,
திராவிடர் கழகம்

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு