இட ஒதுக்கீட்டு உரிமை - 50 நூல்கள் - அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் சூழ்ச்சி!
இட ஒதுக்கீட்டு உரிமை - அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் சூழ்ச்சி!
தலைப்பு |
இட ஒதுக்கீட்டு உரிமை - 50 நூல்கள் |
---|---|
எழுத்தாளர் | அதி அசுரன் |
பதிப்பாளர் |
காட்டாறு |
பக்கங்கள் | 32 |
பதிப்பு | இரண்டாம் பதிப்பு - 2016 |
அட்டை | காகித அட்டை |
விலை | Rs.500/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/ida-othukkeedu-urimai.html
அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் சூழ்ச்சி!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை:
கல்வி, வேலை வாய்ப்புகளில் 10 சதவிகிதத்தை ஏழைகளாக உள்ள உயர்ஜாதியினருக்கு ஒதுக்கிடும் புதிய அரசியல் சட்ட திருத்த மசோதாவை மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று (8.1.2019) மக்களவை, நாளை (9.1.2019) மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டு வேக வேகமாகக் கிளம்பியுள்ளது!
இது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் அடங்கிய அடிக்கட்டுமான அம்சங்களுக்கே முற்றிலும் முரணானது; சட்டப்படி நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் போது இது சட்டப்படி செல்லாததாகவே ஆகிவிடுவது உறுதி.
நரசிம்மராவ் பிரதமரானபோது தனியே 10 விழுக்காடு "பொருளாதார அடிப்படையில் " ஒதுக்கியபோது நடந்த, இந்திரா - சகானி வழக்கு என்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய (மண்டல் கமிசன் இட ஒதுக்கீடுபற்றிய வழக்கு) தீர்ப்பில் 13(1), 14, 15, 15(4) ஆகிய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி (16.11.1992) மிகவும் தெளிவாகவே பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட உயர்ஜாதி யினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆணை அறவே செல்லாது என்று திட்டவட்டமாகவே தீர்ப்பளித்துவிட்டது
15(4) என்று முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொணர்ந்தபோது பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் பி.ஆர். அம்பேத்கர் எல்லாம் பல உறுப்பினர்களுடன் விவாதித்த போதும், அதற்கு முன்பே அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய விரிவான 340 அய் எழுதும்போதே - எந்தெந்த வரையறைச் சொற்கள் (விவாதிக்கப்பட்டு பின் போடப்பட்டதோ) அதே சொற்களைத்தான் "Socially and Educationally" என்று போடப் பட்டதை அப்படியே 15(4) என்ற புதுப்பிரிவை பிற்படுத்தப்பட்டவர் களுக்கான இட ஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தத்திலும் கையாளப்பட்டது.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: