தமிழர் பண்பாடும் தத்துவமும் (அலைகள்) - பதிப்புரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/thamizhar-panpaadum-thathuvamum-alaigal
பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் இந்நூல் தத்துவப் பின்புலத்தில் பண்பாட்டைப் புரிந்து கொள்ள உதவும். முருகன் - கந்தன் இணைப்பு உருவான வரலாறு, மணி மேகலைக் காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் பௌத்தம் வளர்ந்த வரலாறு, தமிழ் நூல்களில் பொருள் முதல் வாதக் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும் தன்மைகள் ஆகியவற்றை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. தொன்மங்களை அடிப்படை யாகக் கொண்டு கலை வரலாறு உருவாவதையும் இந்நூல் தெளிவு படுத்துகிறது.
- அலைகள் வெளியீட்டகம்
“பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துக்கள்' ' என்னும் தலைப்புள்ள கட்டுரை, பொருள் முதல் வாதத்தை (உலகாயதக் கொள்கையை) ஆராய்கிறது.
'வடநாட்டில் இருந்த பழைய உலகாயதக் கொள்கையைப் பற்றிச் சமீப காலத்தில் சில அறிஞர்கள் ஆராய்ந்து அது பற்றிச் சில நூல்களை எழுதியுள்ளனர்.
ஆனால் தென்னாட்டு உலகாயதக் கொள்கையை இதுவரையில் ஒருவரும் ஆராய்ந்து நூல் எழுதவில்லை. திரு நா. வானமாமலை அவர்கள், தமிழ் நாட்டு உலகாயதக் கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்கிறார்.
- மயிலை சீனி வேங்கடசாமி