ஈ.வெ.ரா.வாழ்வும் பணியும் - நன்றியும் வணக்கமும்
https://periyarbooks.com/products/ee-ve-ra-vaazhvum-paniyum-bharathi-puthagalayam
இந்நூலினை எழுதுவதற்குத் தேவைப்பட்ட குறிப்புகள் சேகரிக்கும் பொருட்டு சென்னை பெரியார் திடலிலுள்ள தங்கள் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்த பெரியார் சுயமரியாதை டிரஸ்டுக்கும், அதன் தலைவர் திருமிகு. கி. வீரமணி எம்.ஏ.பி.எல். அவர்களுக்கும், இந்நூலின் மூலப் பிரதியைப் படித்து தக்க ஆலோசனைகளை வழங்கிய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் திரு. கி. வரதராசன் அவர்களுக்கும் அதேபோன்று மூலப்பிரதியைப் படித்து ஊக்கமூட்டிய கலாநிதி நா. சுப்பிரமணியன், பிரபல தமிழ் எழுத்தாளர் திரு. கமலாலயன், ஓவியர் திரு. ஸ்ரீரசா, பத்திரிகையாளர் திரு. ப. முருகன் ஆகியோருக்கும், இந்நூலை மனமுவந்து முதல் பதிப்பை வெளியிட்ட சவுத்விஷன் நிறுவனர் திரு. எம். பாலாஜி அவர்களுக்கும் இப்பதிப்பை, இப்பொழுது வெளியிடுகிற பாரதி புத்தகாலயத்திற்கும் என் இதயங்கனிந்த நன்றியையும், வணக்கத்தையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
என். ராமகிருஷ்ணன்
சென்னை 29.07.2015