திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் - திருமுன் படைப்பு
ஆண்மைச் சிங்கத்தின் அடையாளம். எவருக்கும் அஞ்சாமல் நடுநிலையோடு கருத்துரைக்கும் சால்பினர். தற்காலத் தமிழ் இலக்கியத்தின் நக்கீரர்.
மாணவராய், ஆசிரியராய் அமைந்த தமிழியக்கப் போராளி. ஆய்வறிஞராய் அனைவருக்கும் நன்மழை பொழிந்த கருமுகில், ஈழத் தமிழர்களின் இன்னலைக் கண்டு கொதித்து எழுந்த குணக்குன்று.
'சாதியம் ஒழிக' என்று எழுதுபவர்களும் பேசுபவர்களும் அவர் களுக்கு நேர் மாறாகச் சாதி வளர்ப்புப் பண்ணை நடத்துகின்றனர். ஆனால், இவரோ தம் வாழ்வில் சாதியத்தை ஆழக் குழிதோண்டிப் புதைத்தவர்.
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனாய் பண்பிலே தெய்வ மாய்ப் பார்வையிலே அண்ணனாய் விளங்கியவர்.
உன் அன்பில் கட்டுண்டு இருந்த தம்பியரை விட்டு எங்குச் சென்றாய்? உங்களுடைய பசுமையான நினைவுக்குத் தமிழ் இளங்கோவின் இந்நூல், நிறைந்த அன்புடன் திருமுன் படைக்கப் பெறுகிறது.
முனைவர் இரா. இளவரசு