திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் - ஆசிரியர் குறிப்பு
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/dravida-iyakkam-valartha-tamiz.html
ஆசிரியர் குறிப்பு
முனைவர் மு.பி. பாலசுப்பிரமணியன் நெல்லை மாவட்டம், தென்காசி வட்டம், இலஞ்சிக்கு அருகில் உள்ள அய்யாபுரம் என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர்.
நினைவில் வாழும் மு. பிச்சைமுத்து கனியம்மாள் இணையருக்கு 16.05.1939 அன்று பிறந்தவர்.
சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வாணிதாசன் கவிதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
1965ஆம் ஆண்டு முதல் 20 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளவர். அவற்றுள் கவிதை மேகங்கள் என்னும் நூல் தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது. இலக்கிய நெஞ்சம் என்னும் நூல் கல்லூரிகளில் பட்ட வகுப்புகளுக்குப் பாடநூலாக இருந்தது.
தமிழக அரசு சார்பாக பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஐம்பெருங்குழு உறுப்பினராக இருந்து செயல்பட்டவர். மத்திய அரசு சார்பில் திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றியவர்.
'தமிழக அரசு அறிவியல் தமிழ் மன்றத்தில் துணைத் தலைவராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர்.
தமிழக அரசு சார்பில் 1989 டிசம்பரில் மொரீசியசு நாட்டில் நடைபெற்ற ஏழாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரை வழங்கியவர்.