திராவிட சினிமா - நன்றி
திராவிட இயக்கத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எழுவதற்கு தியோடர் பாஸ்கரனின் சித்திரம் பேசுதடி தொகுப்பு காரணமாக அமைந்தது. திராவிட இயக்கத்தின் திரைப்பட முன்னெடுப்புகளைத் திட்டமிட்டு மறைத்த அடாத செயலை அறிவுப்பூர்வமாக முறியடிக்கவே இந் நூலைத் தொகுக்க முனைந்தோம். இத்தொகுப்பை வெளியிட முன் வந்த கயல் க வின் நிறுவனத்தின் ஆலோசகர் மருத்துவர் சுதந்திராதேவி அவர்களுக்கும் கயல்கவின் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கே.எஸ்.இராஜமகேந்திரன் அவர்களுக்கும் எங்கள் நன்றியைப் புலப்படுத்திக்கொள்கின்றோம்.
இத்தொகுப்புக்கான கட்டுரைகளை ஒளிநகல் எடுக்க உதவிய வர்கள் ரோஜா முத்தையா, ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர், பிரகாஷ் மற்றும் அந்நூலகப் பணியாளர்கள், தந்தை பெரியார் ஆவணக் காப்பகப் பொறுப்பாளர்கள், அண்ணா அறிவாலயம் பேராசிரியர் ஆய்வு நூலகத்தின் நூலகர் சுந்தரராஜன் ஆகியோருக்கு எங்கள் நன்றி.
திரைப்பட இதழாளர்கள் பிலிம் நியூஸ் ஆனந்தன், ஜெயபாபு, மக்களவை முன்னாள் உறுப்பினர் இரா.செழியன், காஞ்சிபுரம் மகேசன், குருவிக்கரம்பை வேலு, இதழாளர் அ.மா.சாமி, திரு. காந்தி கண்ணதாசன், வந்தவாசி திரைவசந்தன், மருங்கூர் தியாகநேசன், மதுரை கோவிந்தன், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் குடும்பத்தினர், எம்.ஜி. ஆர். இல்ல நிர்வாகிகள், ஆரணி திராவிடமணி குடும் பத்தி னர், காஞ்சி கல்யாண சுந்தரம் குடும்பத்தினர், நாகை தி.மு.கழகப் பொறுப்பாளர், முரசொலி அலுவலக நூலகப் பொறுப்பாளர்கள், பொன்னேரி இளந்திரையன், புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளை அன்புடன் தந்துதவினர். அவர்களுக்கு எங்கள் அன்பும் நன்றியும் என்றும் உரியது.
இந்நூலாக்கப் பணியில் மெய்ப்புத் திருத்தப் பணிகளுக்கு உத விய பா.ஜெயபால், அ.சுஜிதா ஆகியோருக்கு எங்கள் அன்பு உரித்தாகுக.
இன்டர்போகஸ் நிறுவனத்தின் திரு மதி டி.வாசுகி, பரமேஷ்குமார் ஆகியோரின் அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்? இந்நூலை அழகுற தட்டச்சு செய்து வடிவமைத்த அந்நிறுவனத்தைச் சார்ந்த டி. ஆனந்த குமரன், வி.மாதவன், பி.வினோத்குமார், வி.சுப்புலட்சுமி ஆகியோருக்கும் இந்நூலின் அட்டையை வடிவமைத்த ஓவியர் மதுரை பாபுவுக்கும் எங்கள் அன்பும் நன்றியும். இந்நூலை அழகுற அச்சிட்ட திரு.சிவமுருகன் எம்.ஏ., (எஸ்ஸார் ஆப்செட் பிரிண்டர்ஸ், சிவகாசி) அவர்கள் எங்களில் ஒருவர். அவருக்கு நன்றி கூறுவது மரபன்று...... என்றாலும் அவருக்கும் உரித்தாகுக எங்கள் அன்பு.
தோழமையுடன்,
இரா.பாவேந்தன்
வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்