தேசிய கல்விக் கொள்கை பின்னணி மர்மங்கள் - பதிப்புரை
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் கல்வித்துறையைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். தன் கல்விசார் அமைப்புகள் மூலமாகச் செய்து வந்திருக்கும் வெளிப்படையான மற்றும் மறைமுகமான முயற்சிகளை இந்நூல் சரியாகத் தொகுத்து வழங்கியிருக்கிறது. இத்தொகுப்பு நமக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக மடைமாற்றம் செய்து பொது அங்கீகார முத்திரையைப்பதிக்கும் பணியை மட்டுமே கஸ்தூரிரங்கன் குழு செய்திருக்கிறது என்கிற அச்சம் தரும் உண்மை இந்நூலில் வெளிப்படுகிறது.
பிரதமர் தலைமையிலான ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக்கின் ஆளுகையின் கீழ் இந்தியாவின் ஒட்டுமொத்தக் கல்வியையும் கொண்டுவரும் இவ்வரைவு கல்வியில் நிலவ வேண்டிய ஜனநாயகம், அறிவுச் சுதந்திரம் இரண்டையும் சவக்குழிக்குத் தள்ளுகிறது. அரசியல் தலையீடுள்ள வணிகமயமாக்கப்பட்ட ஒரு துறையாகக் கல்வித்துறையை இவ்வரைவறிக்கை மாற்றியுள்ளதை அறிக்கையின் பக்கங்களுக்கு ஊடாகப் பயணம் செய்து விளக்குகிறது இந்நூல்.
திரு.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசுக்குச் சமர்ப்பித்திருக்கும் 'தேசியக் கல்விக்கொள்கை வரைவு-2019' குறித்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் கட்டுரைகள், நூல்களின் வரிசையில் இந்நூல் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.
உள்ளும் புறமுமாக இவ்வரைவறிக்கை தயாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் 11 பேர் பின்னர் 9 பேர் ஆன கதையிலிருந்து துவங்கி அந்த 9 பேரின் அரசியல், கல்விப் பின்புலம் என்ன என்பதை ஆதாரங்களுடன் விவரிக்கிறது. ஒன்பது பேரில் இரண்டு பேரைத்தவிர பிற எல்லோருமே (கஸ்தூரிரங்கன் உட்பட) ஆர்.எஸ்.எஸ்.காரர்களாவோ அல்லது இந்துத்துவ அமைப்புகளில் ஏதேனும் ஒன்றுடன் நெருக்கமானவர்களாகவும் இந்துத்துவ சிந்தனைகளை ஏற்றவர்களாகவும் இருப்பதை வெளிச்சமிட்டிருக்கிறார் முனைவர் சந்திரகுரு.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் கல்வித்துறையைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். தன் கல்விசார் அமைப்புகள் மூலமாகச் செய்து வந்திருக்கும் வெளிப்படையான மற்றும் மறைமுகமான முயற்சிகளை இந்நூல் சரியாகத் தொகுத்து வழங்கியிருக்கிறது. இத்தொகுப்பு நமக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
ஆர். எஸ். எஸ் ஸின் கல்விக்கொள்கையை தேசியக்கல்விக்கொள்கையாக மடைமாற்றம் செய்து பொது அங்கீகார முத்திரையைப்பதிக்கும் பணியை மட்டுமே கஸ்தூரிரங்கன் குழு செய்திருக்கிறது என்கிற அச்சம் தரும் உண்மை இந்நூலில் வெளிப்படுகிறது.
பிரதமர் தலைமையிலான ராஷ்ட்ரிய சிக்ஸா ஆயோக்கின் ஆளுகையின் கீழ் இந்தியாவின் ஒட்டுமொத்தக் கல்வியையும் கொண்டு வரும் இவ்வரைவு கல்வியில் நிலவ வேண்டிய ஜனநாயகம், அறிவுச் சுதந்திரம் இரண்டையும் சவக்குழிக்குத் தள்ளுகிறது. அரசியல் தலையீடுள்ள வணிகமயமாக்கப்பட்ட ஒரு துறையாகக் கல்வித்துறையை இவரைவறிக்கை மாற்றியுள்ளதை அறிக்கையின் பக்கங்களுக்கு ஊடாகப் பயணம் செய்து விளக்குகிறது இந்நூல்.
கல்வியைப் பரவலாக்கப் புதிய ஆலோசனைகளைச் சொல்லாமல், ஏராளமான கண்காணிப்பு அமைப்புகள், எண்ணிலடங்காத் தேர்வுகள், வடிகட்டும் நிறுவனங்கள், அதிகாரக்குவிப்பு என்கிற பாதையையே முன் மொழிந்துள்ளது.
பள்ளிக்கல்வியையும் உயர்கல்வியையும் சிதைப்பதற்கான ஆலோசனைகளை எப்படி இவ்வரைவறிக்கை அடுக்கடுக்காக முன் வைத்துள்ளது என்பதை 30 அத்தியாயங்களில் விவரிக்கும் இந்நூல், இவ்வரைவறிக்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும் ஓர் முக்கியத் திறவுகோலாக அமைந்துள்ளது.
2019 ஆகஸ்ட் 23 அன்று திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்துகின்ற தேசியக் கல்விக்கொள்கை வரைவுக்கு எதிரான கல்வி உரிமை மாநாட்டின் சிறப்பு வெளியீடாகக் இந்நூல் கொண்டுவரப்படுகிறது.
ச. தமிழ்ச்செல்வன்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: