திமுக வரலாறு - முன்னுரை
திமுக வரலாறு - முன்னுரை
தலைப்பு |
திமுக வரலாறு |
---|---|
எழுத்தாளர் | டி.எம்.பார்த்தசாரதி |
பதிப்பாளர் |
பாரதி பதிப்பகம் |
பக்கங்கள் | 168 |
பதிப்பு | ஒன்பதாம் பதிப்பு - 2012 |
அட்டை | காகித அட்டை |
விலை | Rs.170/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/thi-mu-ka-varalaaru.html
முன்னுரை
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு தமிழ்நாட்டு இளைஞர் சமுதாயத்தின் புதிய எழுச்சியை உருவாக்கி அவர்களை ஒன்றுபடுத்திய ஒரு சமுதாய வரலாறு ஆகும்.
சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்திலே கால் கொண்டு, திராவிடர் கழகத்தின் பணியிலே வளர்ச்சி பெற்று, திராவிட இளைஞர் சமுதாயத்தைப் பாசப்பிணைப்போடு ஒன்றுபடுத்தும் வகையிலே, புதிய வலிமையுடன் பிறந்ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழும், தமிழரும் ஏற்றம் பெறும் வகையிலும், தமிழகத்தின் கண் வளமான நல்வாழ்வு எல்லாருக்கும் அமையும் வகையிலும், ஒரு புதிய சமுதாய அமைப்பை உருவாக்கும் பெரும்பணியை மேற்கொண்டு, அப்பணியிலே எண்ணற்ற பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும், அறிஞர்களையும், கலைஞர்களையும் உருவாக்கி ஈடுபடச் செய்த பேரமைப்பு திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும்.
அறிஞர் அண்ணா அவர்களின் ஈடும் இணையுமற்ற அறிவாற்றலும், அரசியல் நுட்பமும், அனைவரையும் பாசத் தோடு அணைத்துச் சென்ற பண்பும், திராவிட முன்னேற்றக் கழகத்தினை ஒரு பெரிய குடும்பத்தைப்போலப் பற்றும் பாசமும் கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பேரணியாக உருவாக்கியது.
இதன் வளர்ச்சிக்கு உறுதுணை செய்தோர் பலர், தியாக முத்திரை பெற்றுச் சிறந்தோர் சிலர்; உயிரையும் இழந்தோர் பலர்; சிறைவாசமும் சித்திரவதையும் பட்டு நலிவடைந்தோர் மிகப் பலர்.
கடந்தகாலக் குறிப்பேடு இது. இதனைப் பொக்கிஷ மெனக் கட்டிக்காப்பது கழகத்தவர்களின் கடமை. இதனை சிறப்புற வெளியிட்டிருக்கும் பாரதி பதிப்பகத்தாருக்கு என் நன்றி உரியதாகும்.
சென்னை
10-5-84 டி.எம்.பார்த்தசாரதி
தொடர்புடைய மற்ற பதிவுகள்: