நூல் திறனாய்வு - ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா
நூல் | ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? |
விலை | ரூ. 300 |
பதிப்பாளர் | நற்றிணை பதிப்பகம் |
எழுத்தாளர் | ப.திருமாவேலன் |
ஒரு ஊரில் ஒரு அறிவில் சிறந்த உழைப்பாளி வாழ்ந்தாராம். அவருடைய அறிவாலும், உழைப்பாலும் அவருக்கு நிறைய செல்வங்களும், புகழும் கிடைத்தனவாம். அவர் வாழ்ந்த வாழ்ந்த காலத்தில் அவருக்கு எதிரிகளாக இருந்தவர்களும், அவர் மீது பொறாமை பட்டவர்களும் அவருடைய வளர்ச்சியையும், புகழையும் குலைக்க முயன்று தோற்றனராம். நீண்ட காலம் வாழ்ந்த அந்த பெரியவர் மறைந்த பிறகு அவர் ஈட்டிய செல்வங்கள் சொத்துக்களாக அவருடைய வாரிசுகளுக்கு வந்து சேர்ந்ததாம்.
அந்த பெரியவர் மறைந்து பல காலம் ஆன பிறகு, திடீரென சிலர் அவருடைய முக்கியமான சொத்துக்களில் ஒன்றை அவருடையது அல்ல என்றும், அவர் உழைப்பால் அது ஈட்டப்பட்டது அல்ல என்றும், அது ஏமாற்றி பெறப்பட்டது என்றும், அவருக்கு அது சொந்தமானது அல்ல அது எங்களுடையது என்றும் பேச ஆரம்பித்தனராம். இதனை ஊர் தோறும் பேசி பரப்பியவர்கள் அந்த சொத்திற்கு உரிமை கோரி வழக்கு தொடுத்தனராம். இந்த வழக்கால் அந்த பெரியவர் தன் உழைப்பால் வாங்கிய சொத்துக்கு மட்டுமல்ல அவருடைய புகழுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியதாம்.
பெரியவரின் வாரிசுகள் அதனை மறுத்து வாதிட்டு வந்த நிலையில், வழக்கை கவனித்து வந்த ஒரு திறமையான நேர்மையான வழக்கறிஞர், தானாக முன் வந்து அந்த வாரிசுகளுக்கு ஆதரவாக வழக்கில் இணைந்தாராம். அந்த பெரியவரின் உழைப்பு, அவர் ஈட்டிய செல்வங்கள், சொத்திற்கான ஆவணங்கள் ஆகியவற்றிற்கான ஆதாரங்களைத் திரட்டி, தொகுத்து நீதிமன்றத்தில் சமர்பித்தாராம். சொத்திற்கு புதிதாக உரிமை கோரியவர்களின் தவறான வாதங்களை அடையாளம் காட்டியும், அதனை மறுத்து சரியான ஆதாரங்களோடு கூடிய வாதத்தையும் முன்வைத்தாராம் அந்த சிறந்த வழக்கறிஞர். இந்த ஆதாரங்கள் மற்றும் வாதங்கள் வழக்கின் போக்கையே மாற்றி அந்த பெரியவரின் உண்மையான வாரிசுகளுக்கு சாதகமாக மாற்றுவதனால், அந்த வாரிசுகள் தங்களுடைய மகிழ்ச்சியோடு கூடிய நன்றியை அந்த வழக்கறிஞருக்கு தெரிவித்து மகிழ்கின்றனராம்.
சம்பளம் வாங்காத அந்த வழக்கறிஞருக்கு நானும் என் உளமார்ந்த நன்றியைை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
தோழர் திருமாவேலனுக்கு என் உளமார்ந்த நன்றி!
குறிப்பு: தோழர் திருமாவேலன் எழுதிய ‘ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?’ என்ற நூல் வெளிவந்த சில நாட்களிலேயே அதனை வாங்கி படித்து முடித்தேன். அது குறித்து தோழர் திருமாவேலன் அவர்களோடு பேச முயற்சித்தேன் ஆனால் அவருடைய கைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அந்த நூல் குறித்த எனது கருத்தை முகநூலில் பதிய வேண்டும் என நினைத்தேன் ஆனால் அதனையும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்துவிட்டேன். இன்று அதனை இந்த வகையில் பதிந்து விட்டேன்.
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
- திராவிடப் புரட்சி
https://facebook.com/puratchi.dravidan/photos/a.458654844316318/1024247984423665/