ஆஷ் படுகொலை - புனைவும் வரலாறும்
வரலாறு என்பது இறந்தகாலமல்ல, வரலாறு என்பது நிகழ்காலம். நாம் நம் வரலாற்றை வாழ்ந்து கொண்டிருக் கிறோம், நம்முடன் வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம்தான் நம் வரலாறு. வேறு விதமாக நினைத்துக் கொண்டிருந்தால், பாவனை செய்தால், நாம் குற்றவாளிகளாக மட்டும்தான் நிற்போம் என்பது உறுதி.''
- James Baldwin (I am not your negro)
தரவுகளை சேகரித்து, ஒப்பிட்டு ஆதாரங்களாக முன்வைத்து ஒரு சமுகத்தின் நிகழ்வுகளை எடுத்துரைப்பது வரலாறு. ஆனால் இந்தியாவில், தமிழ் நிலத்தில், தரவுகளை, ஆதாரங்களை மறைத்து பிம்பங்களை அவை சார்ந்த கருத்துக்களை கட்டமைப்பதே வரலாறு என வழங்கும் நிலை. கூடுதலாக வரலாறு என்பதே ஒரு புனைவு தான் என்பது போன்ற அரைகுறை நிறப்பிரிகை ஊடான பொது புத்திக்கூற்றுகளும் தொடர்ந்து உதிர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட அடிப்படை மனிதர்களின் வெளிப்படையான நிலையிலிருந்து, தரவுகளை, ஆதாரங்களை மீண்டும் ஆராய்ந்து, புனைவுகளை ஒதுக்கி, ஆஷ் படுகொலை என்ற காலனியகால நிகழ்வின் வரலாற்றை முன்வைக்கிறது இந்நூல். வரலாற்றை வெறும் புனைவாக மட்டும் காண்பவருக்கும், புனைவை மட்டும் வரலாறாக காண்பவருக்கும் ஒரு வழிகாட்டியாக இந்நூல் அமையு மென்ற நம்பிக்கை விடியலுக்கு இருக்கிறது.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: