அறியப்படாத தமிழ்மொழி - மடல் உரை
அன்பு கெழுமிய...
- தமிழைக் காதலிக்கும் அனைத்துலக மக்களுக்கும்,
- தமிழ் மக்களுக்கும்,
- தமிழராய் வாழும் பிறமொழி மக்களுக்கும்,
முதல் வணக்கம்!
வழக்கமான இலக்கிய/இலக்கண/கவிதை/புதினப் புத்தகம் அல்ல இது. இந்தப் புத்தகம், ‘பேசும் புத்தகம்’!
ஆம், உங்களோடு நேரடியாகப் பேசும் புத்தகம். இன்றைய விரைவுக் காலத்தில், வீட்டில் ஒருவரோடு ஒருவர் அமர்ந்து, நம் வீட்டைப் பற்றிப் பேசுதல் என்பதே குறைந்து விட்டது அல்லவா? வளரும் கால மாற்றம் என்றால் அப்படித் தான்!
ஆனால் சில இல்ல விழாக்களில், நாம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, “அட! இவ்ளோ தானா இது? இவ்ளோ நாள் இதையா புரிஞ்சிக்காம காலம் கழிச்சிட்டோம்? அடச்சே!” என்று நம்மை நாமே சிரித்துக் கொள்வதும் ஓர் இன்பம் தானே? அவ்வகையான ‘பேசும் புத்தகமே’ இது!
அப்படியென்ன தமிழைப் புரிந்து கொள்ளாமலேயே, நாம் காலம் கழிச்சிட்டோம்?
ஓர் எடுத்துக்காட்டுக்குச் சொல்கிறேன். “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி” என்று பலரும் Punch Dialogue பேசக் கேட்டிருக்கோம். ஆனால், “அது எப்படிப் பூமி தோன்றும் முன்பே, மனிதன்/தமிழன் என்ற உயிர் தோன்றியிருக்கும்? அப்படி அறிவியல் அல்லவே?” என்று கேட்டிருக்கிறோமா? J இல்லை! கேட்கவேயில்லை; புகழ்ச்சி மாயை அப்படி! இலக்கியத் தமிழிலேயே ஊறிவிட்ட நாம், அறிவியல் தமிழுக்குள் செல்லவேயில்லை!
இன்னொன்றும் சொல்கிறேன்; ஆறுபடை வீடுகள் மொத்தம் எத்தனை?
“இதென்னடா கேள்வி, எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்பது போல்? அதான் பேரிலேயே இருக்கே? ஆறுபடை வீடுகள், ஆறு!” இல்லை, ஆறுபடை வீடுகள் = ஆறு அல்ல! 1, 2, 3 ஷீக்ஷீ 4? நீங்களே ஊகியுங்கள்
வியப்பா இருக்கா? ‘மதம் சார்ந்த’ ஒன்றாகிவிட்டதால், ‘தமிழ் சார்ந்த’ பலவும் தூசியில் தூங்கிவிட்டன; தூசி படர்ந்து உண்மை தெரிவதில்லை. இது போல், பலப்பல சுவையான செய்திகளை, இந்தப் புத்தகம் அலசும்.
- அறியப்படாத தமிழ்
- மறுக்கப்பட்ட தமிழ்
- மறைக்கப்பட்ட தமிழ்
- இன்றும் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்
அதென்ன, ‘மறைக்கப்பட்ட’ தமிழ்? யார் மறைத்தார்கள் நம் மொழியை? தமிழ் மொழி நல்லாத் தானே இருக்கு? தமிழ் நாடு நல்லாத் தானே இருக்கு? சமூக நீதி இயக்கங்கள் தோன்றி, பழைய சாதிக் கொடுமை எல்லாம் போயாச்சே? எல்லோருக்கும் கல்வி என்றாகி விட்டதே? பிறகு என்ன?
உண்மை! ‘சமூக நீதி’ தன்னை ஓரளவு வென்றெடுத்து, இன்றும் போராடுகிறோம்! ஆனால் ‘பண்பாட்டு நீதி’? இன்னும் ஆரம்பிக்கவே இல்லை!
அதற்கே இந்த நூல்! நம் மரபில்/பண்பாட்டில், பலப்பல நூற்றாண்டுகளாக, நம்மை அறியாமல், பொய்யென்றே தெரியாமல் பழகிவிட்ட பொய்கள்!
6 படை வீடுகளா? Sol-ஆ Chol-ஆ? முதல் திணை குறிஞ்சியா? திருக்குறளில் Vegetarian/புலால் மறுப்பு கட்டாயமா? என்று கேள்விகடந்து, நிறுவப்பட்டுவிட்ட பலப்பல பொய்கள்!
“ஆ! பொய்களா?”
ஆம்! பொய்களே! “பொய்கள் என்ன?” என்று முதலில் அறிந்தால் தானே, அடுத்து “மெய்கள் என்ன?” என்று அறியமுடியும்? பொய்களே பழகிவிட்டால்?
எல்லா விளக்கும் விளக்கல்ல - சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு! (குறள்)
கால மாற்றத்தால் வரும் நல்ல மாற்றங்கள் வேறு; புடைவை கட்டிய நம் அம்மா, வீட்டில் காலாடை போட்டுக் கொள்வது, அவர்கள் விருப்ப வசதி. ஆனால், திணிக்கப்பட்ட மாற்றங்கள்? நம்மை/நம் பிள்ளைகளை இழிவாகப் பேசும் சில சம்ஸ்கிருத மந்திரங்களை, வீடு முழுதும் ‘பக்தி’ என்ற பேரில், நாமே ஒலிக்கவிடுதல் நல்ல மாற்றமா? இல்லை!
மொழி தெரியாததால், மதம் பிடித்துள்ளதால், சடங்கு சம்பிரதாயம் என்றாகிப் பழகிவிட்டதால், நம் மரபைப் பழிக்கும் சொற்களையே மந்திரம் என்ற பேரில் ஒலிக்கவிட்டு, அறியாமல் கண்மூடிச் சடங்கு செய்து கொண்டு இருக்கிறோம். எத்தனை நாள் இப்படியே செய்யப் போகிறோம்?
தொல்காப்பியர் முதல் தொ.பரமசிவன் வரை...ஐயன் வள்ளுவன் முதல் மொழிஞாயிறு பாவாணர் வரை...
அறிஞர்கள் அளவிலேயே தங்கிவிட்ட தமிழ் உண்மைகளை,
- உங்கள் வீதிக்கு எடுத்து வருவதே, இந் நூலின் ‘நோக்கம்’
- உங்கள் வீட்டுக்கு எடுத்து வருவதே, இந் நூலின் ‘நோக்கம்’
கால வெள்ளத்தில் ஊறி ஊறித் தூர் வாராமலேயே மண் அண்டிப் போய், குளம் àகுட்டை ஆகிவிடும் அல்லவா? தமிழ்க் குளத்தை, உங்களோடு சேர்ந்து, தூர் வாரும் புத்தகமே இது! வாங்க, மகிழ்ச்சியா ஒரு கைக்கொடுங்க!
நூலெனும் விசைப் படகுக்குள், விறுவிறு பயணம் செய்யலாம், வாங்க! வாங்க!