அன்னை மணியம்மையின் சிந்தனை முத்துக்கள் - பதிப்புரை
அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களின் நினைவுநாளில், அவர் வெளியிட்ட கருத்துகளை ஓர் அரிய தொகுப்பாக வெளியிடுவதில் நமது நிறுவனம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறது.
இதன் தொடக்கத்திலிருந்து ஆயுள் செயலாளராகப் பணிபுரிந்த அம்மையார் ஒரு பல்கலைக் கொள்கலன். அவர்கள் அய்யா அவர்கட்கு ஆற்றிய தொண்டுதான் சிலருக்குத் தெரியும். ஆனால், இன்றைய இளைய தலைமுறையினருக்கும், எதிர்காலத் தலை முறையினருக்கும் அவர் ஒரு பல்துறை அறிஞர் (Multi faceted genius) என்பது விளங்கும் வண்ண ம் இத்தொகுப்பு அமைந்துள்ளது.
இதனை இந்நூல் வடிவில் தொகுப்பதற்கு முழு முயற்சியும் எடுத்துக் கொண்டவர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள். தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு, சிந்தனை முத்துகள் மாலையாகத் தொகுத்து அளித்துள்ளார். அம்மாவின் ஆற்றல் வரலாற்றுப் பெருமை உடையது என்பதற்கு இதைவிட என்ன சான்று தேவை?
கி.வீரமணி,
செயலாளர்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: