அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்
கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா
பிரெஞ்சு நாட்டு அரசியல் ஆய்வாளர். தெற்காசிய நிகழ்வுகளில் கவனம் செலுத்தி ஆராய்ந்து வருகிறார். கிங்ஸ் இந்தியா இண்ஸ்டிட்யூட்டில் பேராசிரியராக இருக்கிறார். 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி' என்று தொடங்கி பல இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். பத்துக்கும் மேற்பட்ட நூல்கள், தொகுப்புகள் வெளிவந்துள்ளன. வட இந்திய அரசியலில் தாழ்த்தப்பட்டவர்களின் எழுச்சியை விரிவாகப் பதிவு செய்யும் இவருடைய India's Silent Revolution எனும் நூல் குறிப்பிடத்தக்கது. நரேந்திர குமாருடன் இணைந்து இவர் சமீபத்தில் தொகுத்த நூல், Dr. Ambedkar and Democracy: An Anthology.
பூ.கொ. சரவணன்
செஞ்சிக்கு அருகில் உள்ள பொன்பத்தியைச் சேர்ந்தவர். விகடனில் தலைசிறந்த மாணவ நிருபர் விருது பெற்றவர். 'டாப் 200 வரலாற்று மனிதர்கள்', 'டாப் 100 அறிவியல் மேதைகள்' ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். பொறியியல், வரலாறு, சமூகம், பெண்ணியம் எனப் பல்துறை சார்ந்த மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டுள்ளார். இவருடைய சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், பிம்பச்சிறை. எம். எஸ்.எஸ். பாண்டியனின் The Image Trap என்னும் நூலின் தமிழாக்கம்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: