தொழிற்சங்க மேதை ஏ.எஸ்.கே.அய்யங்கார்
தொழிற்சங்க மேதை ஏ.எஸ்.கே.அய்யங்கார்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
மாலை வேளையில் காலார நடக்கின்ற பழக்கம் எனக்கு உண்டு. இராயபுரம் சுடுகாட்டுப் பகுதியில் செல்லுகின்ற பொழுதெல்லாம் தவறாமல் ப. ஜீவானந்தம் சமாதி, என். ஜீவரத்தினம் சமாதி, ஏ.எஸ்.கே. அய்யங்கார் சமாதியைப் பார்ப்பதென் வழக்கம். அங்குள்ள அவலங்களைக்கண்டு எனது நெஞ்சம் துடிக்கும். எந்த மக்களுக்காக இவர்கள் உழைத்தார்களோ, அந்த மக்களே இவர்களை மறந்துவிட்டார்கள். எந்தத் தலைவர்களுக்கு முன் இவர்கள் நின்றார்களோ, அந்தத் தலைவர்களே, இவர்களை மறந்து விட்டார்கள். எந்த இயக்கங்கள் இவர்களை முன்னிலைப் படுத்த வேண்டுமோ, அந்த இயக்கங்களே இவர்களை மறந்தன. என் நெஞ்சம் கதறும்! அது மட்டுமல்ல, ம. சிங்காரவேலர் போன்ற பெருந்தலைவர்களுக்கு இலட்சிய இலக்காக இருந்த சோவியத்து ஒன்றியம் இன்றைக்குச் சிதைந்துவிட்டது. முதலாளித்துவம் பலவகை வியூகங்களை வகுத்து நல்லனவற்றை எல்லாம் இன்றைக்கு அழித்துவிடுகிறது. எல்லா மக்களையும் தான் உண்டு, தன் வேலை உண்டு என்ற வகையில் மக்களின் செயல்பாட்டை ஒடுங்கவைப்பது முதலாளித்துவம்.