சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்
Regular price
Rs. 80.00
Regular price
Sale price
Rs. 80.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
இருட்டறையில் உள்ளதடா உலகம்” என்று புரட்சிக் கவிஞர் பாடினார். இருட்டில் கிடந்து சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இரவைப் பகலாக்கிக் கொண்டு எழுதிக் குவித்தவர் பேரறிஞர் அண்ணா .
அவர் எழுதியளித்த நாடகங்களுள் புகழ்பெற்ற நாடகம் "சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து இராஜ்யம்" என்பதாகும்.
பாண்டவர் வனவாசம், பவளக் கொடி மாலை முதலிய புராணக் கதைகள்தாம் நாடகங்களாக நடிக்கப்பெற்றன. அவை ஒன்றுகூட ஆசிரியரால் தனியாகப் படைக்கப் பெற்றதன்று, வடநாட்டில் வழங்கிவந்த புராணக் கதை களையே நாடகமாக்கி அளித்தனர்; நடித்தனர்.
அந்த நாடகங்களால், மடமை, அறியாமை, கண்மூடிப் பத்தி, பொருந்தாத சாத்திரம், அறிவுக்கு ஒவ்வாத கதைகள் உலவிய நாட்டில் - ஒரு திடீர்த் திருப்பத்தை உண்டாக்கி விட்டார் பேரறிஞர் அண்ணா .